``டுப்ளெஸ்ஸிஸுக்கு நன்றியோ நன்றி!” - குவாலிஃபையர்2 ஆட்டம் குறித்து வாட்சன் | Watson talked about partnership with faf

வெளியிடப்பட்ட நேரம்: 07:32 (11/05/2019)

கடைசி தொடர்பு:07:32 (11/05/2019)

``டுப்ளெஸ்ஸிஸுக்கு நன்றியோ நன்றி!” - குவாலிஃபையர்2 ஆட்டம் குறித்து வாட்சன்

ஐபிஎல் தொடரில் விளையாடிய 10 தொடர்களில் 8 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் மும்பை அணியுடனான தோல்விக்கு பின்னர் தற்போது வாட்சன் மற்றும் டுப்ளெஸ்ஸிஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் டெல்லி அணியை வீழ்த்தி மீண்டும் மும்பை அணியைச் சந்திக்க தயாராகியுள்ளது தோனியின் சிங்கப்படை. 

வாட்சன்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு அதிக கவலை அளித்த விஷயம் வாட்சனின் ஃபார்ம்தான். அவர் தொடக்க ஓவர்களில் ஆட்டமிழந்துவிட அடுத்து வரும் வீரர்களுக்குச் சிரமமாகி விடுகிறது. நேற்றைய ஆட்டத்துக்கு முன்னர் ஹைதராபாத் அணிக்கு எதிராக மட்டுமே வாட்சன் சிறப்பாக விளையாடியிருந்தார். எனினும் அவர் மீது நம்பிக்கை வைத்து சென்னை அணித் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கியது. இதற்கு ஹைதராபாத் போட்டியின் போதே நன்றியும் தெரிவித்திருந்தார். 

நேற்றைய குவாலிஃபையர் 2 போட்டியில் வாட்சன் மெதுவாகத்தான் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு ஃபாஃப் டுப்ளெஸ்ஸிஸ் நல்ல கம்பெனி கொடுக்க வாட்சனின் ப்ரஷர் குறைந்தது. பின் தனது வழக்கமான அதிரடியால் மிரட்டினார். அதுவும் டுப்ளெஸ்ஸிஸை விடக் குறைவான பந்தில் அரைசதம் அடித்து மிரட்டினார். 
 

டுப்ளெஸ்ஸிஸ்

Photo: IPLT20.COM

தனக்கு நல்ல கம்பெனி கொடுத்த பாட்னர் டுப்ளெஸ்ஸிஸுக்கு நன்றி தெரிவித்தார் வாட்சன். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர்,  ``தொடக்கத்தில் ரொம்ப பதற்றமாக உணர்ந்தேன். சென்னை அணி என்மீது கொண்ட நம்பிக்கையை இன்னும் தொடர்கிறார்கள். இந்த ஐபிஎல் எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. இன்றைய தினம் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

டுப்ளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடினார். அந்தக் கட்டத்தில் அவர்தான் எனக்கு உதவினார். அதற்கு அவருக்கு எனது நன்றிகள். அனுபவம் என்பது பாசிட்டிவ் எனர்ஜி தருவது போன்றது. அணியின் அனுபவ வீரர்கள் இருக்கும்போது ஆட்டத்தில் இனி என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் கூடுதலாக இருக்கும். எங்களின் மொத்த அனுபவத்தைக் கொண்டு இறுதிப் போட்டியில் விளையாடுவோம். 

வாட்சன்

மும்பை ஒரு சிறந்த அணி. அந்த அணியில் பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை. இறுதிப் போட்டி நிச்சயம் எங்களுக்குச் சவால் நிறைந்ததாக இருக்கப் போகிறது. தோனி ஒரு அற்புதமான மனிதர். தனது சக வீரர்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். அவருடன் இணைந்து விளையாடுவது  பெருமையான விஷயம். அவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டுள்ளேன்” என்றார்.