`1-2; 0-3 கணக்கு!' - ஐபிஎல் ஃபைனலும் சி.எஸ்.கே - மும்பை அணிகளும் #IPL2019Final | csk vs mi final match

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (12/05/2019)

கடைசி தொடர்பு:12:14 (12/05/2019)

`1-2; 0-3 கணக்கு!' - ஐபிஎல் ஃபைனலும் சி.எஸ்.கே - மும்பை அணிகளும் #IPL2019Final

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தோனி

இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது 12-வது ஐ.பி.எல் தொடர். சென்னையை சொந்த மண்ணிலே வீழ்த்திவிட்டு, நேரடியாக ஃபைனலுக்குள் அடியெடுத்து வைத்தது மும்பை. சென்னை வழக்கமான தனது ரூட்டை பயன்படுத்தி, டெல்லியை சாய்த்துவிட்டு, பைனலுக்குள் காலடி எடுத்துவைத்துள்ளது. இவ்விரு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. கோப்பையை வெல்லும் முனைப்பில் இரவு 7:30 மணி அளவில் களம் காண்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விளையாடிய 10 ஐ.பி.எல் தொடர்களில் 8 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தோனி

4 முறை ரன்னர் அப் ஆகியுள்ளது. முதல் ஐபிஎல் தொடரிலிருந்தே சென்னை அணிக்கு தலைமை தாங்கிவருவபர் தோனி.  சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் தோனி என்ற அச்சாணிதான் என்று தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பலரும் சிலாகித்துள்ளனர். மும்பையைப் பொறுத்தவரை சச்சிடம் தொடங்கி, ரோஹித் கையில் வந்து நிற்கிறது. ரோஹித் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை பெற்று தந்துள்ளார். . இரண்டு அணிகளும் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த தொடரில் சி.எஸ்.கே - மும்பை சந்தித்த போட்டிகள் அனைத்திலும் மும்பையின் ஆதிக்கமே மேலோங்கியது.

ரோஹித் ஷர்மா

நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் சந்தித்த மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளதன் மூலம் ரோஹித் கேப்டன்ஷி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாகக் கடந்த 2010, 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில், 2010ல் சி.எஸ்.கேவும் மற்ற இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் வென்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றன. இந்தநிலையில், 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் சந்திக்கின்றன.  

இதுவரை, நடந்த ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் - தோனி கேப்டன்ஷிப்பில் மும்பையும் சி.எஸ்.கேவும் இதுவரை 16 போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில், மும்பை 10 முறையும், சி.எஸ்.கே 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சென்னைக்கு டஃப் கொடுக்கும் வகையில்தான் கடந்தகாலங்களில் மும்பையின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த 2015-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இறுதி போட்டியில் சென்னையை 41 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டியது மும்பை. இதையெல்லாம் வைத்து தான் இன்றையபோட்டியின் சுவாரஸ்யம் மேலும் கூடியுள்ளது. பலம் வாய்ந்த இருஅணிகளும் மோத உள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. மும்பையா? சென்னையா? என்பது ஹைதராபாத்தில் இன்று இரவு தெரிந்துவிடும்.