```தல' தோனி, வீரர் மட்டுமல்ல... கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம்!'' - மேத்யூ ஹெய்டன் | Hayden praises CSK captain Dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (12/05/2019)

கடைசி தொடர்பு:08:12 (13/05/2019)

```தல' தோனி, வீரர் மட்டுமல்ல... கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம்!'' - மேத்யூ ஹெய்டன்

தோனி என்பவர் வீரர் மட்டுமல்ல கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் புகழாரம் சூட்டியிருக்கிறார். 

தோனி

Photo: IPLT20.COM

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கெனவெ இரு அணிகளும் தலா 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில், இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி புதிய சாதனையைப் படைக்கும். 

ஹெய்டன்

போட்டி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் சி.எஸ்.கே-வின் முன்னாள் வீரருமான மேத்யூ ஹெய்டன், `தோனி என்பவர் ஒரு வீரர் மட்டுமல்ல... அவர் கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம். கல்லி கிரிக்கெட் டீமின் கேப்டன் அவர் என பல்வேறு வகைகளில் நான் சிந்தித்ததுண்டு. அவர் நம்மில் ஒருவர். அவர் எதையும் செய்வார். ஒரு போட்டிக்கு அவர் தயாராகும்விதம், பந்துவீச்சாளர்களிடம் வேலைவாங்கும் விதம், அவர் பந்தைப் பிடிக்கும் விதம் மற்றும் சக வீரர்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றில் மிகவும்  ரிலாக்ஸாகவே நடந்துகொள்வார். அன்றாட வாழ்க்கையில் குடும்பம், நண்பர்கள் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாம், அவருடைய பண்பை நம்முடன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். 

தோனி

Photo: IPLT20.COM

தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் உங்களை அமைதியாகவும் ரிலாக்ஸாகவும் உணரச் செய்வதால்தான் அவர் `தல' தோனி. `தல' என்ற வார்த்தைக்குப் பொருள் சென்னையின் தலைவர் என்றிருக்கலாம், உண்மையில் அவர் தேசத்தின் தலைவர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.