`தினேஷ் கார்த்திக் தேர்வுக்கு என்ன காரணம்?' - மௌனம் கலைத்த கோலி | Virat Kohli speaks about why Dinesh Karthik was picked ahead of Rishabh Pant for world cup

வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (15/05/2019)

கடைசி தொடர்பு:14:46 (15/05/2019)

`தினேஷ் கார்த்திக் தேர்வுக்கு என்ன காரணம்?' - மௌனம் கலைத்த கோலி

உலகக்கோப்பையில் ரிசப் பன்ட்டுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டது குறித்துப் பேசியுள்ளார் கேப்டன் கோலி.

தினேஷ் கார்த்திக்

உலகக்கோப்பை ஜுரம் ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு அணியும் வெறித்தனமாகப் பயிற்சி செய்துவருகின்றன. ஆனால், இன்னமும் இந்திய அணியின் உலகக்கோப்பை வீரர்கள் தேர்வு குறித்த விவகாரத்தில் புகைச்சல் அடங்கவில்லை. அம்பதி ராயுடு, ரிசப் பன்ட்டுக்குப் பதிலாக தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றது குறித்து தேர்வுக் குழு விளக்கம் அளித்துவிட்டது. முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துவிட்டனர். இருந்தும் சர்ச்சை அடங்கவில்லை. இந்த விவகாரத்தில் நீண்ட நாள்களாகக் கருத்து தெரிவிக்காமல் இருந்த இந்திய கேப்டன் கோலி, தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ரிசப் பன்ட்டுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசியுள்ளார்.

கோலி

 ``தினேஷ் அனுபவமிக்க வீரர். பிரஷர் சூழ்நிலைகளை அமைதியாகக் கையாள்வார். இந்த விஷயத்தில் தேர்வுக்குழுவில் இருந்த அனைவருக்கும் நம்பிக்கை இருந்தது. உலகக்கோப்பை போட்டியின்போது கடவுள் ஏதாவது தடையை ஏற்படுத்தி தோனிக்கு விளையாட முடியாமல் போனால் விக்கெட் கீப்பிங்கிற்கு தினேஷ் ஒரு மதிப்பு மிக்க வீரராக இருப்பார். ஒரு ஃபினிஷராகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இப்படி ஒட்டுமொத்தமாக அவரது பிளஸ்கள் அவரைத் தேர்வு செய்ய முதன்மை காரணமாக இருந்தது" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க