``அவர் திறமைக்குப் பக்கத்தில்கூட யாரும் இல்லை!” - பாண்ட்யாவை புகழ்ந்து தள்ளிய சேவாக் | sehwag talks about pandya's all rounder abilities

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (16/05/2019)

கடைசி தொடர்பு:08:00 (16/05/2019)

``அவர் திறமைக்குப் பக்கத்தில்கூட யாரும் இல்லை!” - பாண்ட்யாவை புகழ்ந்து தள்ளிய சேவாக்

இங்கிலாந்தில் மே மாதம் 30-ம் தேதி தொடங்க இருக்கும் உலகக்கோப்பை தொடர் குறித்தும் ஹர்திக் பாண்ட்யா ஆட்டம் குறித்தும் பேசியுள்ளார் சேவாக். 

பாண்ட்யா

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக கவனம் ஈர்த்த இந்திய வீரர் என்று ஹர்திக் பாண்ட்யாவைக் கூறலாம். இறுதிக் கட்டத்தில் களமிறங்கி மும்பை அணிக்கு வெற்றிகளைப் பெற்று தந்திருக்கிறார். அசராமல் அவர் அடிக்கும் சிக்ஸர்கள் அணிகளைத் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. பாண்ட்யா இதே ஃபார்மை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரிலும் தொடர வேண்டும் என ரசிகர்கள் ஆசை தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றார்போல் ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு பேசிய ஹர்திக்,  ``ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டோம். அடுத்து உலகக்கோப்பை தான்” என்றார். 

சேவாக்

இந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக் பேசியிருக்கிறார். பிரபல கிரிக்கெட் ஊடகத்துக்குப் பேட்டியளித்த அவரிடம் ஹர்திக் பாண்ட்யா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர்,  ``தொலைக்காட்சி நிகழ்ச்சி சர்ச்சைக்குப் பின்னர் திரும்பிய பாண்ட்யாவின் ஆட்டம் பிரமிக்க வைக்கிறது. பாண்ட்யா மற்றும் ராகுலை ஆஸ்திரேலிய தொடரில் இருந்து திருப்பி அழைத்ததே அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைதான்” என்றார்

தொலைக்காட்சி நிகழ்ச்சி

தொடர்ந்து உலகக்கோப்பை அணிக்கு பாண்ட்யா தேர்வு குறித்துப் பேசிய சேவாக், ``பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கும் பாண்ட்யாவுக்கு நிகரான வீரர்கள் யாரும் இல்லை. அவருக்கு நிகர் வேண்டாம், 3 டைமென்ஷன்களிலும் ஆடும் அவரின் திறமைக்கு கிட்ட யாராவது வந்தால்கூட பிசிசிஐ  அவரைதான் தேர்வு செய்திருக்கும். பாண்ட்யாவால் அணிக்குத் திரும்பியிருக்கக்கூட முடியாது. அவர் சந்தித்த பிரச்னை அப்படி. ஆனால் அது நடக்கவில்லை. அவர்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்” என்றார். 

ஹர்திக்

வரும் உலகக்கோப்பை தொடரில் பாண்ட்யா நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.