`வாழ்க்கையே மாறிடுச்சு; அன்று மட்டும் 50 போன்கால்!' - நிதாஹஸ் டிராபி அனுபவம் பகிரும் விஜய் சங்கர் | Nidahas Trophy was a life changing experience as a cricketer for me says Vijay Shankar

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (16/05/2019)

கடைசி தொடர்பு:17:43 (16/05/2019)

`வாழ்க்கையே மாறிடுச்சு; அன்று மட்டும் 50 போன்கால்!' - நிதாஹஸ் டிராபி அனுபவம் பகிரும் விஜய் சங்கர்

நிதாஹஸ் டிராபியின்போது நடந்த சம்பவங்கள் குறித்து இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் பேசியுள்ளார்.

விஜய் சங்கர்

கடந்த வருடம் நிதாஹஸ் டிராபியின்போது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானவர் விஜய் சங்கர். இருப்பினும் அதன்பிறகு தனது ஆட்டத்தை மேம்படுத்திய அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டார். அதன்பயனாக தற்போது உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்நிலையில் நிதாஹஸ் டிராபியின்போது நடந்த சம்பவங்கள் குறித்து விஜய் சங்கர் தற்போது பேசியுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில், ``ஒரு கிரிக்கெட்டராக என் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் என்றால் நிதாஹஸ் டிராபிதான். இது உண்மை. இது நடந்து ஒருவருடம் ஆகிவிட்டது. எல்லோரும் என்ன நடந்தது, எப்படி கடினமாக இருந்தது என்று எனக்குத் தெரியும். அன்றைய தினம் மட்டும் ஒரு 50 போன்கால்கள் பேசியிருப்பேன். அனைவரும் மீடியா நபர்கள்தான். எல்லோரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்கள். 

விஜய்

அதையேதான் வலைதளங்களிலும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது எனக்குக் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஏமாற்றத்துடன் இருந்த நான் சில மணி நேரங்கள் இதிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என நினைத்தேன். அன்றைக்கு நடந்த இந்தச் சம்பவங்கள் அனைத்தும் எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து செல்ல வேண்டும் என எனக்குக் கற்றுக்கொடுத்தது. இன்றோடு உலகம் நின்றுவிடப் போவதில்லை என்பதை அந்த ஒரு மோசமான நாள் உணர்த்தியது. எனக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை. இதுமாதிரி பல்வேறு வீரர்களுக்குப் பல ஆண்டுகளாக நடந்துள்ளது. இதில் ஒரு நல்ல விஷயம். அன்று என் பேட்டிங் குறித்துத்தான் விமர்சிக்கப்பட்டது. அந்தத் தொடரில் நான் பௌலிங்கும் செய்திருந்தேன். 

விஜய் சங்கர்

அந்த ஒரு போட்டியில்தான் பேட்டிங் செய்தேன். அப்போது இப்படியெல்லாம் நடக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் அன்று நடந்தவை எனது வாழ்நாள் பாடமாக அமைந்தது. ஒவ்வொரு நிகழ்வும் தாற்காலிகம்தான்; நாம் 100 சதவிகித உழைப்பைக் கொடுக்க வேண்டும் என அன்றைய பாடம் எனக்குச் சொல்லிக்கொடுத்தது. இந்திய அணியில் நாமும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய கனவாக இருக்கும். தோனி, கோலி, ரோஹித் போன்றவர்களைப் பார்க்கும்போது எனக்கும் அந்த ஆசை வந்தது. இவர்களிடமிருந்து மோசமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது எனக் கற்றுக்கொள்ள நினைத்தேன். இதற்காக இவர்களின் ஆட்டத்தை எப்போதும் கண்காணித்து கொண்டிருப்பேன். 

விஜய்

அதேபோல் அவர்களிடம் பேசியது ஒரு கிரிக்கெட் வீரராக என்னை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவியது. ``நீ உனது பணியைச் செய். உன்னுடைய கவனம் முழுவதும் நீ செய்யப் போகிற விஷயத்தில்தான் இருக்க வேண்டும்" என எப்போதும் அவர்கள் என்னிடம் கூறுவார்கள்" எனக் கூறியுள்ளார் 29 வயது இளம் ஆட்டக்காரர்.

 

news credits: hindustantimes

நீங்க எப்படி பீல் பண்றீங்க