``ப்ளேயிங் லெவனில் ராகுல் கட்டாயம்!” - காரணம் சொல்லும் திலிப் வெங்சர்க்கார் | dilip vengsarkar says rahul is fit to 4th spot

வெளியிடப்பட்ட நேரம்: 10:18 (17/05/2019)

கடைசி தொடர்பு:10:33 (17/05/2019)

``ப்ளேயிங் லெவனில் ராகுல் கட்டாயம்!” - காரணம் சொல்லும் திலிப் வெங்சர்க்கார்

உலகக்கோப்பைத் தொடரில் 4 -வது இடத்துக்குப் பொருத்தமான வீரராக கே.எல் ராகுல் இருப்பார் என இந்திய அணி தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். 

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இங்கிலாந்து பக்கம் திரும்பியுள்ளது. உலகக்கோப்பைத் தொடரில் தங்களின் ஃபேவரைட் அணி எப்படி விளையாடப் போகிறது என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், இந்திய அணியில் இன்னும் 4 -வது வீரருக்கான இடம் குறித்த விவாதம் முடியவில்லை. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய அணியின் 4 -வீரர் ஸ்பாட்டுக்குப் பிரச்னை இருந்தது. இந்திய அணியின் கேப்டன் கோலி, ``ஒரே ஒரு இடம்தான் பிரச்னை. மற்றபடி இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயார்” என முன்னதாகக் கருத்து தெரிவித்திருந்தார். 

ராயுடு

ராயுடுவுக்கு பதிலாகத் தமிழக வீரர் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். அதனால் அவர்தான் 4 -வது வீரராகக் களமிறங்குவார் எனக் கூறப்பட்டது. ஆனால், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவரது பர்ஃபார்மன்ஸ் குறிப்பிடும் படியாக அமையவில்லை. ஆனால் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடியுள்ளார். 

விஜய் சங்கர்

இதனால் 4 -வது இடத்துக்கான இந்த ரேஸில் இவர் முந்துகிறார் எனப் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும், விக்கெட் கீப்பராக இல்லாமல் பேட்ஸ்மேனாக அணி நிர்வாகம் எங்குக் களமிறங்கச் சொன்னாலும் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதனால் 4 -வது வீரருக்கான தேர்வு இந்திய அணி நிர்வாகத்துக்குச் சற்று கடினமானதாகத்தான் இருக்கும். ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து வீரர்களுக்குச் சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

தினேஷ் கார்த்திக்

இந்நிலையில் இந்திய அணி தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் திலிப் வெங்சர்க்கார் உலகக்கோப்பை தொடரில் 4 -வது வீரராக கே.எல் ராகுல் தகுதியான வீரராக இருப்பார் எனக் கணித்திருக்கிறார். அதற்கான காரணங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

திலிப் வெங்க்சர்க்கார்

அவர். ``இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. தவான் மற்றும் ரோகித் அந்த இடத்தைப் பார்த்துக் கொள்வார்கள். மூன்றாவது இடத்தில் கேப்டன் கோலி. எந்தப் பிரச்னையும் இல்லை. 4 -வது இடத்துக்கு ராகுல் பொருத்தமான வீரராக இருப்பார். 4 -வது இடத்தில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் தேவை. ராகுல் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்கான வீரர். 

ராகுல்

அவர் தொடக்க வீரராகக் களமிறங்கி அனுபவம் கொண்டவர் என்பதால், ஒருவேளை இந்தியா டாப் ஆர்டர் வேகமாக ஆட்டமிழந்துவிட்டலும், புதிய பந்தில் அவரால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். மேலும் இது நீண்ட தொடர். அதனால் தேவைப்பட்டால் சில போட்டிகளில் அவர் ஓப்பனிங் கூட இறங்கலாம். அவர் ப்ளேயிங் லெவனில் இருக்க வேண்டும்” என்றார். 

தினேஷ் கார்த்திக், கே.எல் ராகுல், விஜய் சங்கர்... இவர்களில் 4 -வது இடத்துக்கு உங்களின் சாய்ஸ் யார்...? ஏன்...?  திலிப் வெங்சர்க்கார் போன்று காரணத்துடன் பதிவிடுங்கள் நண்பர்களே..!