‘இந்தியாவுக்கு ஒரு கணக்கு பாக்கி இருக்கு’- கெட்டப்பய சார் இந்த லுங்கி எங்கிடி | I believe we owe them one says Lungi Ngidi

வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (19/05/2019)

கடைசி தொடர்பு:12:48 (19/05/2019)

‘இந்தியாவுக்கு ஒரு கணக்கு பாக்கி இருக்கு’- கெட்டப்பய சார் இந்த லுங்கி எங்கிடி

‘ஒரு கணக்கு பாக்கி இருக்கு உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்குத் திருப்பி தரனும்’ என வில்லன் ரேன்ஜில் பேசியுள்ளார் தென்னாப்பிரிக்காவின் இளம் பந்துவீச்சாளர் லுங்கி எங்கிடி.

 எங்கிடி

 விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2018-ல் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்திய அணி ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதில் தான் சர்வதேச தொடரில் லுங்கி எங்கிடி (Lungi Ngidi) அறிமுகமானார். அந்த தோல்வி அவரை கடுமையாக பாதித்திருக்கும் போல அதன் வெளிப்பாடாகத் தான் இப்போது இப்படி பேசியுள்ளார். டுப்ளிஸில், டிகாக்,  டிவில்லியர்ஸ் என அதிரடி  மன்னர்கள் யாரும் அந்தத் தொடரில் விளையாடவில்லை. மார்க்கரம் தலைமையிலான ஒரு சொத்தை அணியைத் தான் இந்திய வீரர்கள் வெளுத்து வாங்கினர். 

விராட் கோலி

இதுகுறித்து பேசியுள்ள லுங்கி எங்கிடி, “இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் வந்து விளையாடினர். அது அவர்களுக்கு அற்புதமான தொடராக அமைந்தது.  அதனால் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்திய அணியுடனான போட்டியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். இந்திய அணி மிகப்பெரிய அணி அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அப்போது எங்கள் அணியில் சில வீரர்கள் இல்லை. தற்போது அவர்கள் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். இப்போது இந்திய அணியை ஒரு கை பார்க்க வேண்டியுள்ளது. நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதும் உலகக்கோப்பை மீது எனது கவனம் இருந்தது. உலகக்கோப்பை தொடரில் ஆடும் வாய்ப்பைப் பெற வேண்டும் என நினைத்திருந்தேன். அது தற்போது நனவாகியுள்ளது. உலகக்கோப்பையை வென்று அதனைத் தென்னாப்பிரிக்க  மண்ணுக்குக் கொண்டு வர விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.