``என் சகோதரனிடமிருந்து தனித்துத் தெரிவதற்காகவே சிறப்பாக விளையாடுவேன்'' - டாம் கரண் #PlayerBio | Tom Curran wants to perform well to distinguish himself from his brother

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (20/05/2019)

கடைசி தொடர்பு:19:07 (20/05/2019)

``என் சகோதரனிடமிருந்து தனித்துத் தெரிவதற்காகவே சிறப்பாக விளையாடுவேன்'' - டாம் கரண் #PlayerBio

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வரும் மிட்செல் ஸ்டார்க்கின் யார்க்கர்கள் எவ்வளவு அச்சுறுத்துமே, அதைப்போலவே இவரது 130 kms/hr யார்க்கர்களும் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தும். காரணம், அந்த சீம் மூவ்மென்ட்.

``என் சகோதரனிடமிருந்து தனித்துத் தெரிவதற்காகவே சிறப்பாக விளையாடுவேன்'' - டாம் கரண் #PlayerBio

பெயர்: தாமஸ் கெவின் கரன்

பிறந்த தேதி : 12.03.1995

பிறந்த ஊர் : கேப் டவுன், தென்னாப்பிரிக்கா.

ரோல் : பௌலர்

பேட்டிங் ஸ்டைல் : வலது கை பேட்ஸ்மேன்

பௌலிங் ஸ்டைல் : வலது  கை வேகப்பந்துவீச்சாளர்

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் : 26.12.2017

செல்லப்பெயர்: டாமீ

டாம் கரண்

பிளேயிங் ஸ்டைல்

டாம் கரன், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியின் புதுவரவு. பேட்டிங் பவுலிங் இரண்டிலும் நல்ல பங்களிப்பைக் கொடுக்கக்கூடியவர். இன்றைய இளம் பௌலர்களைப்போல் வேகத்தை நம்பியிருப்பவர் அல்ல இவர். சராசரியாக 135 கிலோமீட்டர் வேகத்தில்தான் பந்துவீசுவார். ஆனால், அவர் கொடுக்கும் லேட் மூவ்மென்ட், பேட்ஸ்மேன்களைத் திணறடித்துவிடும். அதிலும் குறிப்பாக யார்க்கர்கள் வீசுவதில் கில்லாடி. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வரும் மிட்செல் ஸ்டார்க்கின் யார்க்கர்கள் எவ்வளவு அச்சுறுத்துமே, அதைப்போலவே இவரது 130 kms/hr யார்க்கர்களும் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தும். காரணம், அந்த சீம் மூவ்மென்ட். டெய்ல் எண்டர்களையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் காலி செய்துவிடுவார். பேட்டிங்கைப் பொறுத்தவரை, தேவையான பொழுது அடித்து ஆடுவார். ஆஃப் சைட் ஆடுவதை அதிகம் விரும்புபவர். 

டாம் கரண்

கிரிக்கெட் பயணம்

ஜிம்பாவேவின் முன்னாள் வீரர் கெவின் கரனின் மகன். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆடும் ஆல்ரவுண்டர் சாம் கரனின் சகோதரர். 'Kwazalu natal inland' அணிக்காக 15 வயது இருக்கும்போது ஆடத்தொடங்கினார். அவரின் ஆட்டத்தைப் பார்த்த சர்ரே அணியின் கேப்டன் அவரைத் தன் அணியில் ஆட வைத்தார். பின் 2013–ல் `லிஸ்ட் ஏ’ போட்டிகளில் ஆடியவர், 2014 முதல்தர போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீச, 2017-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். 2018 ஐ.பி.எல் தொடரில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது 5 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

டாம் கரண்

சிறந்த பெர்ஃபாமன்ஸ்

* 5-35 vs ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் கடைசி ஒருநாள் போட்டி. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 259 ரன்கள் அடிக்க, 260 என்ற இலக்குடன் ஆட வந்த ஆஸ்திரேலிய அணிக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் டாம் கரன். முதல் ஸ்பெல்லில், தன் டிரேட் மார்க் யார்க்கரால் வார்னரை வெளியேற்றினார். மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியா ஓரளவு தாக்குப்பிடிக்க, மீண்டும் வேட்டைக்கு வந்தார் கரன். ஒரு ஏலியன் லெவல் ஸ்விங்... ஆஃப் ஸ்டம்புக்கு வெகுதொலைவில் பிட்சான பந்து, லெக் ஸ்டம்ப் லைனில் வந்து, மேக்ஸ்வெல் பேடைப் பதம் பார்த்தது. பின்னர் ஒரு அவுட் ஸ்விங்கில் மிட்செல் ஸ்டார்க்கையும், இன்ஸ்விங்கில் ஆடம் ஜம்பாவையும் வெளியேற்றி மிரட்டினார். டிம் பெய்ன் மட்டும் விடாப்பிடியாகப் போராடிக்கொண்டிருக்க, டாம் `ஸ்பெஷல்' டெலிவரி ஒன்று வீசி, அவரையும் காலி செய்தார். 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. ஆட்டநாயகன் விருது இவருக்கே!

டாம் கரண்

* 3-28 vs எசெக்ஸ்

இங்கிலாந்து டி-20 தொடரான நாட்வெஸ்ட் டிராபி. முதலில் ஆடிய கரனின் சர்ரே அணி 188 ரன்கள் குவிக்க, அதை வெறியுடன் சேஸ் செய்தது எசெக்ஸ்.  கடைசி ஓவர் வரை பதட்டம் இருக்கத்தான் செய்தது. 6 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை. 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது எசெக்ஸ். முதல் பந்தில் இரண்டு ரன்கள் ஓடினார் போபாரா. எசெக்ஸ் வென்றுவிடும் என்றே எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால், டாம் விட்டுக்கொடுக்கவில்லை. தன்னுடைய ஆயுதமான யார்க்கரைப் பயன்படுத்தினார். போபாரா போல்டு. அடுத்த 2 பந்துகளில் 4 ரன்கள். கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை. மீண்டும் விக்கெட் வீழ்த்தினார். இந்த முறை அசார் ஷாஹிதி. கடைசிப் பந்தில் பௌண்டரி வேண்டும். மிகவும் கூலாகப் பந்துவீசி, 1 ரன் மட்டுமே கொடுக்க, த்ரில் வெற்றி பெற்றது சர்ரி. இந்தப் போட்டியிலும் டாம் தான் ஆட்டநாயகன்!

டாம் கரண்

டாம் கரண் ஸ்பெஷல்

இவரின் தந்தை ஜிம்பாவேயின் முன்னாள் கிரிக்கெட்டர் கெவின் கரன்.

இவரின் கடைசி தம்பியான சாம் கரன் இங்கிலாந்து அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறார்.

நார்த்தன்டாம்ப்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் டாம் கரனும், சாம் கரனும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தியது பெரும் சாதனையாக இருக்கிறது. 

"என் சகோதரன் சாம் கரனின் சமீபத்திய செயல்பாடுகள் என்னை மிஞ்சுவதாய் இருக்கிறது. அவரையும் என்னையும் வைத்து நிறையவே குழப்பிக்கொள்கிறார்கள். உங்கள் நினைவில் தனியாக இருக்க, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்!" 

- டாம் கரன்