சாம்பியனுக்கு 28 கோடி ரூபாய்... உலகக் கோப்பை பரிசுத்தொகை விவரம்! #VikatanInfographics | ICC World Cup 2019 Prize money details

வெளியிடப்பட்ட நேரம்: 08:17 (21/05/2019)

கடைசி தொடர்பு:17:49 (22/05/2019)

சாம்பியனுக்கு 28 கோடி ரூபாய்... உலகக் கோப்பை பரிசுத்தொகை விவரம்! #VikatanInfographics

சாம்பியனுக்கு 28 கோடி ரூபாய்... உலகக் கோப்பை பரிசுத்தொகை விவரம்! #VikatanInfographics

2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்  போட்டிகள் மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 6 வாரங்களுக்கு மேல் நடக்கும் இந்தத் தொடரில், 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இந்தத் தொடரில் வெற்றி பெரும் அணிகளுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 70 கோடி ரூபாய்) வழங்கப்படுகிறது. 

கிரிக்கெட்

உலகக் கோப்பை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.28 கோடி)  வழங்கப்படும் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது. இரண்டாம் இடம் (ரன்னர்-அப்) பிடிக்கும் அணிக்கு $2,000,000 டாலர் (ரூ.14 கோடி) கிடைக்கும். அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு $ 800,000 டாலர் (ரூ.5.61 கோடி) வழங்கப்படும். லீக் தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி பெறும் பரிசுத் தொகை (45 போட்டிகளுக்கு) $40,000 (ரூ.28 லட்சம்). மொத்த லீக் போட்டிகளுக்கான பரிசுத் தொகை $1,800,000 (ரூ.12 கோடி). லீக் தொடரில் முதல் 6 இடங்களுக்கு முன்னேறும் அணிக்கு தலா $100,000 (ரூ.7 லட்சம்) கிடைக்கும். 

Cricket

2015 உலகக்கோப்பை போட்டியின் மொத்த பரிசுத்தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.70 கோடி) கொடுக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்றவருக்கு 3.75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன. கடந்த முறையை விட இந்தமுறை 6.25 சதவிகிதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 

இதுவரை உலகக் கோப்பை வென்றவர்கள்!

வெஸ்ட் இண்டீஸ் : 1975, 1979
இந்தியா : 1983, 2011
ஆஸ்திரேலியா : 1987, 1999, 2003, 2007, 2015
பாகிஸ்தான் : 1992
இலங்கை  : 1996

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்