நாங்கள் ஏன் எங்களுக்குள் `போட்டியிட்டுக்கொள்ள வேண்டும்?' - பாண்ட்யா குறித்து விஜய் சங்கர் | I am not shy when it comes to asking questions,”says Shankar.

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (22/05/2019)

கடைசி தொடர்பு:08:00 (22/05/2019)

நாங்கள் ஏன் எங்களுக்குள் `போட்டியிட்டுக்கொள்ள வேண்டும்?' - பாண்ட்யா குறித்து விஜய் சங்கர்

விஜய் சங்கர்


உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில், தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆல்ரவுண்டராக  இந்திய அணியில் நான்காவது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-வது வீரருக்காக ரேஸில் விஜய் சங்கர், கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர். உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்கள், ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், விஜய் இங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். தனது சிறுவயது பயிற்சியாளரிடம் பேட்டிங் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். 

கிரிக்கெட்


இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் சங்கரிடம், 4-வது இடத்தில் ஆடுவது குறித்தும் ஹர்திக் பாண்ட்யா தொடர்பாகவும் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சங்கர், ``ஹர்திக் பாண்ட்யா இடத்துக்கு நான் போட்டியிடவில்லை. அவர் அதிரடியாக ஆடக்கூடியவர். நாங்கள் இருவரும் ஆல்ரவுண்டர்கள் என்றாலும் அதில் மாறுபட்டு காணப்படுகிறோம். நாங்கள் ஏன் எங்களுக்குள் போட்டியிட வேண்டும். நாங்கள் இருவரும் இந்தியாவின் வெற்றிக்காகப் பாடுபடுவோம். நான் சிக்ஸர் அடிப்பதை விரும்புவேன். நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது. கடினமான சூழலில் என்னால் முடிந்த பங்களிப்பை அணிக்குச் செய்தேன். 

ஹர்திக் பாண்ட்யா

நான் எனது சிறுவயது பயிற்சியாளருடன் கடந்த சில நாள்களாக பேட்டிங் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டேன். விவிஎஸ் லஷ்மண் எனக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். நான் கொஞ்சம் அமைதியான சுபாவம் கொண்டவன். களத்தில் எனக்கு ஏதாவது சந்தேகம் என்றால், தயங்காமல் தோனி மற்றும் கோலியிடம் சென்று ஆலோசனை கேட்பேன். அவர்களும் என்னுடைய கேள்விகளுக்கு மகிழ்ச்சியாகப் பதிலளிப்பார்கள்.  கேள்விகள் கேட்பதற்கு நான் எப்போதும் தயங்க மாட்டேன்” என்றார்.