``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள் | Gomathi Marimuthu handed provisional supsension after testing positive for banned substance

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (22/05/2019)

கடைசி தொடர்பு:20:45 (22/05/2019)

``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்

தோஹா ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

கோமதி

பாட்டியாலாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியின்போது, அவரிடத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை  பரிசோதனை நடத்தியது. அதில், ' நான்ட்ரோலன்' என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. `முறைப்படி, எங்களுக்கு தகவல் அளிக்கப்படவில்லை. ஊக்கமருந்து சோதனை முடிவை தாமதமின்றி அறிவித்திருந்தால், நாங்கள் அவரை ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதித்திருக்க  மாட்டோம்' என்று இந்திய தடகள சம்மேளன அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோமதி ஊக்க மருந்து பயன்படுத்தியது தொடர்பாகத் தடகள சம்மேளனம் அவருக்கு இ-மெயில் அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  தற்போது, அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுனம் தெரிவித்துள்ளது.  அடுத்தபடியாக, 'பி' மாதிரியும் பரிசோதிக்கப்படும். இந்தச் சோதனை முடிவைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும். கோமதி ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டால், ஆசிய தடகளத்தில் அவர் வென்ற தங்கம் பறிக்கப்படும். தற்போது, 30 வயதான அவர், 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க முடியாது.

கோமதி, 'தன் வாழ்க்கையில் ஊக்கமருந்து எடுத்தது இல்லை' என்று மறுப்பு தெரிவித்துள்ளார். தன், பி மாதிரியைப் பரிசோதிக்க வேண்டுமாறும் கோரியுள்ளார். கோமதியின் சகோதரர், கோமதி மீது பொறாமை காரணமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் International athletics federation’s Athletics Integrity Unit என்ற அமைப்பு உலகம் முழுக்க தடை செய்யப்பட்ட வீரர் வீராங்கனைகள் பட்டியலில் நேற்று கடைசியாக கோமதி மாரிமுத்துவை சேர்ந்துள்ளது.  கோமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க