2011 -ல் வெற்றிக் கொண்டாட்டம்; இன்று...? - ஹர்திக் பாண்ட்யாவின் த்ரோபேக் ஷேரிங்ஸ் | World cup dream it has been come true says hardik pandya

வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (25/05/2019)

கடைசி தொடர்பு:07:55 (25/05/2019)

2011 -ல் வெற்றிக் கொண்டாட்டம்; இன்று...? - ஹர்திக் பாண்ட்யாவின் த்ரோபேக் ஷேரிங்ஸ்

ஹர்திக் பாண்ட்யா

Photo: MumbaiIndians

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ‘மந்திரச்சொல்’ போன்றது. இந்த விளையாட்டு இங்கு ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளது.  இந்தியாவுக்காக கபில் தேவ், தோனி ஆகியோர் உலகக்கோப்பை பெற்று தந்துள்ளனர். இன்னும் சில நாள்களில் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்குப் பயணப்பட்டுள்ளனர். இந்தியாவுக்குக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

தோனி

தோனி தலைமையிலான இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையைக் கையில் ஏந்திய போது நாடே கொண்டாட்டத்தில் இருந்தது.  குஜராத்தை சேர்ந்த ஒரு இளம்கிரிக்கெட் வீரன் தனது நண்பர்களுடன் டிவியில் போட்டியைக் கண்டுகளித்தான். தோனியின்  சிக்ஸர்கள் அவனை உற்சாகப்படுத்தியது. வதோரோ வீதிகளில் நண்பர்களுடன் அந்த வெற்றியைக் கொண்டாடி தீர்த்தான்.வெற்றிக்கொண்டாட்டத்தில் ஏராளமான புகைபடங்களை க்ளிக் செய்தான்.

 

2013 பரோடா அணிக்காக விளையாடுகிறான். ராஞ்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் ஐபிஎல் தொடருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கினார். அதே வேகத்தில் 2016-ல் இந்திய அணியில் இடம்கிடைத்தது. தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து வருகிறார் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா எனும் அந்த இளைஞன். 

கிரிக்கெட்


 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பிடித்துள்ளார். இந்திய வீரர்களுடன் இங்கிலாந்து சென்றுள்ள பாண்ட்யா சக வீரர்களுடன் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். இதில் நேற்று அவர் பதிவிட்ட ட்வீட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தோனி, பும்ரா, தவானுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஹர்திக் அதனுடன் தனது நண்பர்களுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

ட்வீட்

அந்த கேப்ஷனில், “ 2011 உலகக்கோப்பை தொடரின் போது ஒரு ரசிகனாக இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ஊக்கப்படுத்தினேன். அந்த வெற்றியை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினேன். தற்போது 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஒரு வீரராக பங்கேற்கிறேன். நான் கண்ட கனவு நனவாகி உள்ளது எனப் பதிவிட்டுள்ளார். வாழ்த்துகள் ஹர்திக்...