‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா! | Rohit Sharma reveals interesting batting tips he received from fans

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (26/05/2019)

கடைசி தொடர்பு:09:40 (26/05/2019)

‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா!

ரோஹித் ஷர்மா


இந்திய மக்களுக்கு கிரிக்கெட் மீதான மோகம் அதிகரிகமாகவே காணப்படுகிறது. மற்ற விளையாட்டுகளை காட்டிலும் வெறித்தனமான ரசிகர்கள் கிரிக்கெட்டிற்கு உண்டு.  கிரிக்கெட்டின் அத்தனை நுணுக்கங்களையும் இவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.  இந்திய வீரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே ரசிகர்கள் தான்.  ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் ரசிகர்களுக்கும் , வீரர்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாக பார்க்கப்பட்டுகிறது. தங்களது கருத்துகளை நேரிடையாக அவர்களுக்குத் தெரிவிக்க இந்த சமூகவலைதளங்கள் உதவுகின்றன. பிரச்னைகளும் இங்கு தான் உருவாகிறது.  

ஒரு போட்டியில் பேட்ஸ்மேன் மோசமாகச் செயல்பட்டால் மோசமான கமெண்ட்களை ட்வீட் செய்வது. நீங்கள் அந்த பந்தை இப்படி ஆடியிருக்கலாம். இது தேவையில்லாத ஷாட் போன்ற கமெண்ட்கள் குவிந்துவிடும்.. இது குறித்து பேசியுள்ள  இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட் மேன் ரோஹித் சர்மா நான் வீட்டை விட்டு வெளியே வந்தால் போது ரசிகர்களிடம் இருந்து ஏராளமான பேட்டிங் ஆலோசனைகள் கிடைக்கும். அவை அனைத்தையும் கேட்டுவிட்டு பேசாமல் நகர்ந்துவிடுவேன் என கூறியுள்ளார்.

கிரிக்கெட்

ரசிகர்களின் அன்புத்தொல்லை குறித்து ஆங்கில ஊடகத்திற்கு ரோஹித் அளித்துள்ள பேட்டியில், “ நான் வீட்டை விட்டு வெளியேபோகும் போது  ‘ஹலோ’ என்ற வார்த்தையுடன் ஒரு நபர் பேசத்தொடங்குவார். அந்த உரையாடல் தொடர்ந்துக்கொண்டே போகும் ஒரு கட்டத்தில் அவர் பேட்டிங் ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்து விடுவார். அந்த கவர் ட்ரைவை இப்படி ஆட வேண்டும். நீங்கள் ஸ்ட்ரைட் டிரைவ் ஆடுவதை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பார். என்னால் அப்போது என்ன செய்ய முடியும் அவர் சொல்வதை கேட்டுவிட்டு அப்படியே நகர்ந்து சென்றுவிடுவேன். அதேபோல் தான் மற்றொரு சம்பவம் அந்த நபர் யார் என்றே தெரியாது ஆனால் அவர் புல் ஷாட் (Pull shot) எப்படி ஆடவேண்டும் என 15 நிமிடங்கள் லெக்‌ஷர் எடுக்க ஆரம்பித்துவிட்டார். காற்றில் பந்தை அடிக்காதே என்றார்.

இந்த மக்களுக்குப் புரிவதில்லை இதுபோன்ற கடினமாக ஷாட்களை நான் ஆடுவதினால் தான் அவர்கள் என்னை அங்கீகரித்துள்ளனர். நான் ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் என்னால் ரன்களை குவிக்க முடியாது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என்னைச் சந்தித்த ஒருவர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை என்னிடம் கூறினார். 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நான் 130 சிக்ஸர்களை அடித்துள்ளதாகக் கூறினார். எனக்கு அடுத்து விராட்கோலி 55 சிக்ஸர்கள் அடித்துள்ளதாகக் கூறினார்.  இப்போது பாருங்கள் எனக்கும் விராட்டுக்கும் இடையேயான இடைவெளி 75 சிக்ஸர்கள் அதுதான் நான் எடுக்கும் ரிஸ்க்” என்று முடித்துக்கொண்டார்.