`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி!' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக் | People take an Indo-Pak match very seriously said inzamam ul haq

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (26/05/2019)

கடைசி தொடர்பு:08:39 (27/05/2019)

`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி!' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்

இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து அந்நாட்டு முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் பேசியுள்ளார்.

இன்சமாம்

கிரிக்கெட் என்றில்லை, எந்த ஒரு விளையாட்டுப் போட்டியாக இருந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றால் எதிர்பார்ப்பு எகிறும். களத்துக்கு வெளியிலும் அனல் பறக்கும். வீரர்கள், ரசிகர்கள் கடந்து இரு நாட்டு மக்களிடையிலும் பெரும் பதற்றமும் எதிர்பார்ப்பும் நிலவும். அதுவும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்கள் எனில் சொல்லவே வேண்டாம். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இதுவரை 12 முறை நேரடியாக மோதியும் இந்திய அணியை இதுவரை பாகிஸ்தான் தோற்கடித்ததில்லை. ஒவ்வொரு முறை உலகக்கோப்பை தொடர் என்று வரும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஒரு கௌரவ போட்டியாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவை வெல்வோம் எனச் சவால்விட்டு பாகிஸ்தான் கிளம்பும். இந்த முறையும் அதேபோல் பாகிஸ்தான் அணி சவால்விட்டுள்ளது. 

இந்தியா

இந்த முறை பாகிஸ்தானை ஜூன் 16-ம் தேதி இந்தியா எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் தேர்வு குழுத் தலைவரும் முன்னாள் வீரருமான இன்சமாம் உல் ஹக் பேசியுள்ளார். அதில், ``இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் என்றாலே மக்கள் சீரியஸாக பார்க்கிறார்கள். அந்தப் போட்டிகள் கௌரவ போட்டியாகவே பார்க்கப்படுகிறது. எங்களால் இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவை வெல்ல முடியவில்லை. இதனால், ``உலகக்கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்தியாவை மட்டும் வென்றால் போதும்" எனச் சிலர் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இந்த மோசமான சாதனையை இந்த முறை முடிவுக்குக் கொண்டுவருவோம் என நம்புகிறேன். அதற்கு ஏற்றாற்போல் வலுவான அணியைத் தேர்வு செய்துள்ளோம். இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே எங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அதனால் இந்தியாவுடனான மேட்சை சாதாரண போட்டியாக நினைத்து விளையாட மாட்டோம்.

இன்சமாம்

இந்தியாவை மட்டுமல்ல எந்த அணியை வீழ்த்தும் திறன் எங்கள் வீரர்களுக்கு இருக்கிறது. நிறைய அழுத்தங்களுக்கு மத்தியில் கவனமாக செயல்பட்டு நல்ல ஒரு டீமை தேர்வு செய்துள்ளோம். பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் உடன் தோற்றாலும் முதல்போட்டியில் வெற்றியுடன் தொடங்க நினைக்கிறோம். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் முதல் போட்டியின் வெற்றி என்பது மிக முக்கியமானது. அதனைப் பெறுவதற்கான தகுதி எங்களிடம் இருக்கிறது. எனது கணிப்பின்படி பார்த்தால், இந்த முறை, இந்தியா, பாகிஸ்தான் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு வர வாய்ப்பு இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க