கேட் சூட்டுக்கு 'நோ', கேப் ஸ்டைலில் புதுமை! - செரினா வில்லியம்ஸின் காஸ்டியூம் சர்ச்சை! | Serena Williams wears a fancy outfit at French Open after the catsuit ban

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (28/05/2019)

கடைசி தொடர்பு:20:20 (28/05/2019)

கேட் சூட்டுக்கு 'நோ', கேப் ஸ்டைலில் புதுமை! - செரினா வில்லியம்ஸின் காஸ்டியூம் சர்ச்சை!

விளையாட்டு மைதானமோ சிவப்புக் கம்பள விரிப்பு வருகையோ, உடைகளில் பல புதுமைகளைப் படைத்துக்கொண்டிருப்பவர் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ். அதிலும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் தொடக்க நாளில் அவர் அணிந்து வரும் உடைகள் எப்போதும் டிரெண்டி ரகம். அந்த வகையில், கடந்த திங்களன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓப்பன் போட்டியின் முதல் சுற்றின்போது செரினா அணிந்திருந்த உடை பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

செரினா வில்லியம்ஸ்


கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓப்பன் போட்டியின்போது, அவர் அணிந்திருந்த `கேட்சூட்' உடை சர்ச்சைக்குள்ளானது. அந்த உடையில் புகைப்படம் எடுத்து, தான் ஒரு 'சூப்பர் ஹீரோ' போன்று உணர்வதாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் வில்லியம்ஸ். இதை, பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் Bernard Giudicelli, "விளையாட்டின்போது இதுபோன்ற உடையை இனி ஏற்றுக்கொள்ள முடியாது. விளையாட்டையும் அதன் இடத்தையும் முதலில் மதிக்க வேண்டும்" என்று கூறி அதுபோன்ற உடையை அணியத் தடைவிதிக்கப்பட்டது. சமீபத்தில் தாய்மையடைந்திருந்த செரினா, மருத்துவத் தேவைக்காக அதுபோன்ற உடையை உடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று பதிலளித்திருந்தார்.

Serena Williams


அதைத் தொடர்ந்து ஷூ தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நைகீ, 'செரீனாவின் உடையிலிருந்து 'சூப்பர் ஹீரோவை' எடுக்க முடியும் ஆனால், அவரின் சூப்பர்பவர்களை அல்ல' என்று ட்விட்டரில் பதிவிட்டுத் தொடர்ந்து அவருக்கு ஆதரவளித்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற 'மெட்காலா' ஃபேஷன் திருவிழாவில் பங்குபெற்ற வில்லியம் மஞ்சள் நிற கவுன், நைகீ ஷு அணிந்து அனைவரையும் கவர்ந்தார். இதைத் தொடர்ந்து, திங்களன்று பாரிஸில் நடைபெற்ற போட்டிக்கு, Virgil Abloh மற்றும் நைகீ பிராண்டுகளின் வடிவமைப்பிலான வெள்ளை மற்றும் கறுப்பு நிற காம்போவில் எலாஸ்டிக் ஹெம் கிராப் டாப், மினி ஸ்லிட் ஸகர்ட் மற்றும் 'Mother, Champion, Queen, Goddess' என்று பிரெஞ்சு மொழியில் பதிக்கப்பட்ட வாக்கியம் நிறைந்த கேப் ஸ்டைல் ஜாக்கெட் முதலியவற்றை அணிந்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.