'கார்ப்பரேட்டுகளுக்கு டிக்கெட்டுகள்; உண்மையான ரசிகனுக்கு? - இங்கிலாந்தில் வெடித்த சர்ச்சை | So Many Empty Seats at Rose Bowl stadium why?

வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (06/06/2019)

கடைசி தொடர்பு:14:26 (06/06/2019)

'கார்ப்பரேட்டுகளுக்கு டிக்கெட்டுகள்; உண்மையான ரசிகனுக்கு? - இங்கிலாந்தில் வெடித்த சர்ச்சை

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. சவுதாம்ப்டன் நகரில், நேற்று இந்திய அணி  தென்னாப்ரிக்க   அணியை எதிர்த்து  முதல் ஆட்டத்தில் களமிறங்கியது.  இரு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால், போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்டம் தொடங்கி வெகு நேரத்துக்குப் பிறகும் போட்டி நடந்த  ரோஸ்பவுல் மைதானத்தில் ஏராளமான இருக்கைகள்  காலியாக இருப்பதைக் காண முடிந்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் மைதானம்

பி.பி.சி ரேடியோவில் போட்டி வர்ணனையாளராகப் பணியாற்றிய மைக்கேல் வாகன், ''இங்கிலாந்து நேரப்படி காலை 10.30 மணிக்கு போட்டி ஆரம்பிக்கிறது. அப்படியிருந்தும் ஏராளமான இருக்கைகள் காலியாகக் கிடக்கின்றன. அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாகச் சொன்னார்கள்.  அப்படியென்றால், டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? இது வெட்கக் கேடான செயல்” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார். 

மைக்கேல் வாகன்

உலகக் கோப்பைத் தொடரில், திங்கள்கிழமை நாட்டிங்ஹாமில் நடந்த ஆட்டத்தில், இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது.  தாய்நாட்டு அணி விளையாடிய போட்டியைக் காணக் கூட ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. நாட்டிங்ஹாம் மைதானத்திலும் ஏராளமான இருக்கைகள் காலியாக இருந்தன.  

இது, இங்கிலாந்தில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.  ''கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நீங்கள் டிக்கெட்டுகளை விற்கிறீர்கள். கிரிக்கெட் மீது எந்த ஆர்வமும் இல்லாத அவர்கள் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு, போட்டியைக் காண வருவதில்லை. ஆனால், உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. உங்களால், எங்களைப் போன்ற கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை நேரில் காணும் வாய்ப்பை இழக்கிறோம்'' என்று பலரும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் ஏற்பாட்டாளர்கள், இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க