தோனி விக்கெட் கீப்பிங் கிளவுஸில் என்னதான் பிரச்னை? - பாயும் பாகிஸ்தான் அமைச்சர்  | Pakistan minister slam dhoni for Army crest in gloves

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (07/06/2019)

கடைசி தொடர்பு:14:42 (07/06/2019)

தோனி விக்கெட் கீப்பிங் கிளவுஸில் என்னதான் பிரச்னை? - பாயும் பாகிஸ்தான் அமைச்சர் 

லகக் கோப்பை தொடரில் இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான ஆட்டம், சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது, தோனி அணிந்திருந்த விக்கெட்கீப்பிங் கிளவுஸில் பாராமிலிட்டரி ( பாராசூட் ரெஜிமென்ட்  ) Balidaan  முத்திரை இடம் பெற்றிருந்தது. தென்னாப்பிரிக்க வீரர் ஆன்டில் பெலுக்வாயோவை ஸ்டம்ப்பிங் செய்ய முயன்றபோது, தொலைக்காட்சி ஒளிபரப்பில் கிளவுஸில் இடம் பெற்றிருந்த முத்திரை தனியாகத் தெரிந்தது. இந்தியர்கள், தோனியின் நாட்டுப் பற்றை பாராட்டி ட்வீட் செய்த வண்ணம் இருந்தனர். 

தோனி

அதே வேளை, 'சர்வதேச  கிரிக்கெட் போட்டியின்போது, ராணுவ முத்திரை பதித்த கிளவுஸை பயன்படுத்துவது விதிமுறைகளுக்குப் புறம்பானது'  என்று ஐசிசி எச்சரித்துள்ளது. 'அடுத்த ஆட்டத்தில், தோனியின் கிளவுஸில் ராணுவ முத்திரை இருக்கக் கூடாது' என்று பிசிசிஐ-க்கு ஐசிசி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்,' சர்வதேச கிரிக்கெட் விதிகளின்படி, அரசியல், ராணுவம், இனரீதியான, மதரீதியான எந்த விதமான சின்னங்களோ வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் இடம்பெறுவது தவறு'  என்று தெரிவித்துள்ளது,

தோனி கிளவுசில் இடம் பெற்ற முத்திரை

தோனிக்கு ட்விட்டரில் ஆதரவு எழுந்துள்ளது. 'தோனி ,அந்த விக்கெட் கீப்பிங் கிளவுஸையே பயன்படுத்த வேண்டும்' என்று பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.  பாகிஸ்தான் அறிவியல்துறை அமைச்சர் ஃபாஃபத் சவுத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார்.  'தோனி, இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார். மகாபாரதப் போரில் ஈடுபடச் செல்லவில்லை. தோனிக்கு ஆதரவு கொடுக்கும் இந்திய மீடியாக்களைச் சேர்ந்தவர்களை சிரியா, ரவாண்டா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்' என்று அவர் ட்வீட்  செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, தோனி பாராமிலிட்டரி இலச்சினை பொறிக்கப்பட்ட அந்த கீப்பிங் கிளவுஸையே பயன்படுத்த அனுமதிக்குமாறு  ஐசிசி-க்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. 

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சுங் பூட்டியாவின் கருத்து வேறு விதமாக உள்ளது.  ''தோனியின் செய்கை நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக இருந்தாலும் நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் விதிமுறைகளைப் பின்பற்றுவதே நல்லது. விதிமுறைகளை மீறுவதைத் தவிர்ப்பதுதான் சரி ''என்கிறார்.

 2011- ம் ஆண்டு, தோனிக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட்டில் தரையில் குதிக்கும் பயிற்சியும் தோனி பெற்றுள்ளார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க