`யோ யோ பயிற்சியில் தோற்க வேண்டும்!'- ஃபேர்வெல் போட்டிக்காக யுவியிடம் பேரம் பேசிய பிசிசிஐ | 'If you cannot pass the Yo-Yo test, then you could play a retirement match' - bcci told yuvraj

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (11/06/2019)

கடைசி தொடர்பு:16:22 (14/06/2019)

`யோ யோ பயிற்சியில் தோற்க வேண்டும்!'- ஃபேர்வெல் போட்டிக்காக யுவியிடம் பேரம் பேசிய பிசிசிஐ

ர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து விடை பெற்றுள்ள யுவராஜ் சிங், தனக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த பி.சி.சி.ஐ முன் வந்ததாகவும் ஆனால், யோ யோ பயிற்சியில் தோற்க வேண்டுமென்று சொன்னதாக தெரிவித்துள்ளார்.

யுவி

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறும் வீரர்களுக்கு தற்போது யோ யோ பயிற்சி முறையில் வெற்றி பெற்றால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கிறது. உடம்பை ஃபிட்னெஸாக வைத்திருக்கும் வீரர்களால் மட்டுமே யோ யோ டெஸ்ட் பாஸ் பண்ண முடியும். கேப்டன் விராட் கோலி இந்தப் பயிற்சியில் நம்பர் ஒன். கோலியின் ஃபிட்டென்ஸ் குறித்து விவரிக்கத் தேவையில்லை. 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் யோ யோ பயிற்சியில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. தோனி மட்டுமே இதில் விதிவிலக்கு. 37 வயதானாலும் தோனி இப்போதும் தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்துள்ளார். அதோடு, மின்னல் வேகத்தில் ஓடக் கூடியவர்.

விக்கெட்டுகளுக்கிடையே ஓடுதல், ஃபீல்டிங் என அனைத்துக்கும் நல்ல ஓட்டம் முக்கியம். யோ யோ பயிற்சியும் ஓட்டம் சம்பந்தப்பட்டதே. மைதானத்தில் ஏ, பி, சி மூன்று புள்ளிகள் இருக்கும். ஏ- யிலிருந்து பி-க்கு 5 மீட்டர் இடைவெளி அடுத்து பி- யில் இருந்து சி - க்கு 20 மீட்டர் தொலைவு இருக்கும். அதில், பி - யில் இருந்து சி- க்குள்ளான 20 மீட்டர் இடைவெளியை (சென்று திரும்ப 40 மீட்டர்) 14.4 விநாடிகளில் ஓட வேண்டும். இது முதல் சுற்று ஓட்டம். பி-யில் இருந்து ஏ வரை உள்ள 5  மீட்டர் இடைவெளியில் ஸ்லோவாக ஓட வேண்டும். இப்படியாக மொத்தம் 21 ரவுண்டுகள் ஓட வேண்டும். அடுத்து ரவுண்டில் 13.1 விநாடிகளில் முடிக்க வேண்டும். படிப்படியாக குறைந்து கடைசி ரவுண்டை 8.5 விநாடிகளில் ஓடி முடிக்க வேண்டும். சராசரி புள்ளிகளாக 16.1 எடுத்திருக்க வேண்டும்.  வேகமாகவும் ஓட வேண்டும். அதே வேளையில் ஸ்லோவாகவும் ஓட வேண்டும். அதனால், யோ யோ டெஸ்ட் சவால் நிறைந்தது. 

யோ யோ பயிற்சியில் யுலி

யுவராஜ் சிங்கும் யோ யோ டெஸ்டில் வீக்தான். இதனால் இந்திய அணியில் அவரால் இடம் பிடிக்க முடியாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங் கூறுகையில், ``தற்போது உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தருணத்தில் வீரர்கள் குறித்தோ யோ யோ பயிற்சி குறித்தோ சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட விரும்பவில்லை.  உலகக் கோப்பைத் தொடர் நடக்கும்போது,  நான் ஓய்வு அறிவித்துள்ளேன். எனக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த பி.சி.சி.ஐ முன் வந்தது. அதற்கு விலையாக யோ யோ டெஸ்டில் பாஸ் ஆகக் கூடாது என்று நிர்பந்தித்தது. எனக்கு ஃபேர்வெல் போட்டி தேவையில்லை என்று தோன்றியது. அதனால், மறுத்துவிட்டேன். யோ யோ டெஸ்ட் பற்றிப் பேசுவதற்கான தருணம் வரும். அப்போது பேசுவேன்'' என்றார். 

யோ யோ பயிற்சியில் யுவராஜ் சிங் பாஸ் செய்தால் அவருக்கு ஏன் அணியில் இடம் கொடுக்கவில்லை என்கிற கேள்வி எழும். அதனால், யுவராஜை யோ யோ பயிற்சியில் பாஸ் ஆக கூடாது என்று பி.சி.சி.ஐ நிர்பந்தம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. 

`யுவராஜ் சிங்குக்கு கண்டிப்பாக ஃபேர்வெல் போட்டி நடத்தியிருக்க வேண்டும்' என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். அதேவேளையில், `ராகுல் டிராவிட், வி.வி.எஸ் லஷ்மண் போன்ற தலைசிறந்த வீரர்கள் கூட ஃபேர்வெல் போட்டியில் கலந்து கொள்ளவில்லை' என்று யுவராஜ்சிங் பதிலளித்துள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க