வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (09/08/2013)

கடைசி தொடர்பு:15:11 (09/08/2013)

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச், நடால்: முர்ரே அதிர்ச்சி தோல்வி

டோராண்டோ: கனடாவில் நடந்து வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு ஜோகாவிச்சும், நடாலும் முன்னேறியுள்ளனர். ஆனால், விம்பிள்டன் சாம்பியனுமான ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்- உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்டூமின் மோதினர்.

முதல் செட்டை 2–6 என்ற கணக்கில் இழந்த கோஜோவிச், அதன்பின் சுதாரித்து கொண்டு அடுத்த 2 செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றார். 2–6, 6–4, 6–4 என்ற கணக்கில் இஸ்டுமீனை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலும், போலந்து வீரர் ஜகோவிச்சும் மோதினர். இதில் 7–6 (8–6) 6–4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.

2ம் நிலை வீரரும், விம்பிள்டன் சாம்பியனுமான ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 3வது சுற்றில் அவர் லத்வியன் வீரர் குல்பீசிடம் 6–4, 6–3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6–0, 6–3 என்ற கணக்கில் பெல்ஜியத்தின் பிலிப்கென்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்