வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (11/12/2013)

கடைசி தொடர்பு:16:56 (11/12/2013)

கடைசி ஒரு நாள் போட்டி தொடங்கியது: இந்தியா பந்து வீச்சு!

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் கடைசி போட்டி செஞ்சூரியனில் தொடங்கியது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 3 ஒருநாள் போட்டியில், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்திலும், டர்பனில் நடந்த 2வது ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி படுதோல்வி அடைந்ததுடன், ஒரு நாள் தொடரையும் இழந்தது.

இந்நிலையில், 3 ஒருநாள் போட்டியின் கடைசி போட்டி இன்று செஞ்சூரியனில் மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில்  டாஸ் வென்று பேட்டிங்கை தென்னாப்பிரிக்கா தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா பந்து வீசுகிறது.

இந்த போட்டியில், தென்னாப்பிரிக்க அணியில் ஸ்டெயின், போர்கல், காலிஸ் ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஹென்ரி டேவிட்ஸ், பார்னெல், இம்ரான் தாஹிர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்