மரணத்துடன் ஒரு பயணம்: மலைகளுக்கு நடுவே ஒரு ஆபத்தான ரைடிங் வீடியோ!

ஸ்காட்லாந்து நாட்டின் பிரபல சைக்கிள் ரைடர் டேனி மசாஸ்கில் மலைப் பகுதியில் செய்த சாகசப் பயணமே உலகம் முழுவதுமான வைரல் செய்தி. ஒரு ரைடிங் சைக்கிளுடன் டேனி மலையின் உச்சி வரை தரையில் கால் வைக்காமல் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புகிறார். இதை அவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இதுவரை யூடியூப்பில் மட்டும் 12 மில்லியன் பார்வையாளர்கள் இந்த வீடியோவை ஒரு வாரத்தில் பார்த்து மிரட்சியுடன் கண்களை விரிக்கின்றனர்.

ஒரு நொடி கவன சிதறல் ஏற்பட்டால் கூட  மலையிலிருந்து கீழே விழுந்ததும் மரணம் நிச்சயம் என்ற சவாலுடன் அவரின் பயணம் ஸ்காட்லாந்தின் ஸ்கூலியன் மலை தொடரில் சைக்கிளில் சவாரி செய்து சாதித்திருக்கிறார் டேனி. தரையில் கால் படாமல் ஒரு பாறையிலிருந்து மற்றொரு பாறைக்கு சைக்கிளுடன் துள்ளுகிறார். அதில் அதிகபட்டமாக 992 மீட்டருக்கு (3255Ft) ஒரு தாண்டு தாண்டுகிறார். நாம் நினைத்துபார்க்காத செயல்களை எழுதில் செயல்படுத்தியிருக்கிறார் டேனி!..

பி.எஸ்.முத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!