வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (05/02/2015)

கடைசி தொடர்பு:19:45 (05/02/2015)

தேசிய விளையாட்டு: தமிழகத்தின் ஷாமினிக்கு தங்கம்!

திருவனந்தபுரம்:  தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை ஷாமினி குமரேசன் தங்கம் வென்றார்


தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கேரளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் டேபிள் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில், தமிழக வீராங்கனை ஷாமினி குமரேசன் மேற்கு வங்கத்தின் அங்கிதா தாசை சந்தித்தார். இந்த போட்டியில் இரு வீராங்கனைகளும் சம பலத்துடன் மோதியதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.


இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவித்து வந்தாலும் இறுதிக்கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாமினி 4-3 என்ற செட் கணக்கில் அங்கிதா தாசை தோற்கடித்து தங்கம் வென்றார்.

இதன் மூலம் தேசிய விளையாட்டுப் போட்டியில், தமிழக அணி வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பதக்கப்பட்டியலில் தமிழக அணி 6-வது இடம் வகிக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்