ஓய்வை நோக்கி இரவுப்புலி...!

புகழ்பெற்ற கோல்ப் வீரரான டைகர்வுட்ஸ் கோல்ப் விளையாட்டுக்கு தற்காலிக முழுக்கு போட்டுள்ளார்.

புகழ்பெற்ற கோல்ப் வீரராக வலம் வந்த டைகர்வுட்ஸ் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக மவுசை இழந்தார். கோல்ப் ஆட்டத்தில் டைகர்வுட்ஸ் கோலோச்சிய காலத்தில், அவர்தான் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக இருந்தார். நினைத்த நேரத்தில் அமெரிக்க அதிபருடன் பேச முடியும்  என்ற உன்னத நிலையில் இருந்த டைகர் வுட்ஸ், பெண்களுடன் இருந்த சகவாசத்தால் சர்ச்சைக்குள்ளானார். ஏராளமான மாடல்கள், டைகர்வுட்ஸ் தங்களை ஏமாற்றி விட்டடதாக குற்றம் சாட்டினர்

களத்தில் அமைதியாகவும், சாந்தமாகவும் காணப்படும் டைகர் வுட்ஸ், ஒரு இரவு நேரப்புலி என்றெல்லாம் அமெரிக்க பத்திரிகைகள் கவர் ஸ்டோரி வெளியிட்டன. இது போன்ற பிரச்னைகள் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்ட டைகர் வுட்ஸ், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் கோல்ப் விளையாட்டில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் 2013 ஆம் ஆண்டு அவர் மீண்டும் கோல்ப் களத்துக்கு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் கலிபோர்னியாவில் உள்ள டோனி பைன்ஸ் என்ற இடத்தில் கோல்ப் போட்டி ஒன்றில் அவர் பங்கேற்றார். அப்போது அவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டது.

இதையடுத்து அந்த போட்டியில் இருந்து  விலகிய அவர், தற்போது கோல்ப் போட்டியில் இருந்து சில காலம் ஒதுங்கியிருப்பதாக அறிவித்துள்ளார்.

அனேகமாக டைகர் வுட்ஸ் கோல்ப் போட்டியில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!