ரஞ்சி டிராபியில் தமிழக அணியை எதிர்த்து புதிய சாதனை!

ஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்கு எதிராக, கர்நாடக அணி வீரர் கருண் நாயர் 328 ரன்கள் அடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். ரஞ்சி டிராபி இறுதி ஆட்டத்தில் தனிநபர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்..

மும்பை வான்கடே மைதானத்தில் ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் தமிழக அணி, கர்நாடக அணியுடன் மோதி வருகிறது. முதல் இன்னிங்சில் தமிழக அணி 134 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சை துவக்கிய கர்நாடக அணி, ஒரு கட்டத்தில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் கருண்நாயர் -  மிதுன் ஜோடி இணைந்து, கர்நாடக அணியை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியது.

மிதுன் 39 ரன்களில் வீழ்ந்தார். அடுத்து வந்த விநாயக்குமாரும் அபாரமாக ஆடினார். இதில் கருண் நாயர் மட்டும் 328 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இது ரஞ்சி டிராபி இறுதி ஆட்டத்தில் தனிநபர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் கடந்த 1946- 47 சீசனில் பரோடா அணி வீரர் குல் முகமது 319 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.

இந்த போட்டியில் மேற்கொண்டு 10 ரன்களை கருண் சேர்த்திருந்தால், ரஞ்சி டிராபி வரலாற்றிலேயே தனிநபரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்ற புதிய சாதனையை கருண் நாயர் நிகழ்த்தியிருக்க முடியும். இதே சீசனில் கர்நாடக அணி வீரர் ராகுல், உத்தரபிரதேஷ அணிக்கு எதிராக எடுத்த 337 ரன்கள்தான் ரஞ்சி டிராபியில் தனிநபர் ஒருவரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும்.

ரஞ்சி டிராபியில் முதல் இன்னிங்சில் கர்நாடக அணி, 762 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தமிழக அணியை விட கர்நாடக அணி 677 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!