வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (20/03/2015)

கடைசி தொடர்பு:12:50 (20/03/2015)

குளிர்காலத்தில் முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து!

த்தாரில் வரும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.

ஆசிய நாடான கத்தாரில் வரும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. வழக்கமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகன் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில்தான் நடைபெறும். ஆனால் ஜுன், ஜுலை மாதங்களில் கத்தார் நாட்டில் சர்வசாதாரணமாக 45 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் இருக்கும்.

இதனால் வீரர்கள் மட்டுமல்ல வெளிநாட்டு ரசிகர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் போட்டியை குளிர் காலமான டிசம்பர் மாதத்திற்கு மாற்றுவது குறித்து உலக கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா ஆலோசித்து வந்தது. இதன்படி 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் டிசம்பர் 18ஆம் தேதி அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படும் என்று ஃபிஃபா செயற்குழு தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க