'அந்த கை என்னோடதுல்ல... கடவுளோடது...!' - மரடோனா பாணியில் தோனி பதில்

லகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி வங்க தேச அணியுடன் மோதியது. இந்த போட்டியின் போது வங்கதேச அணி வீரர் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பரான தோனி அபாரமாக பாய்ந்து பிடித்தார். எப்படி அபாரமாக அந்த கேட்சை பிடித்தீர்கள்? என்று நேற்று போட்டி முடிந்தவுடன் தோனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்..

அப்போது தோனி, "அதெல்லாம் குறிவைத்தெல்லாம் பாயவில்லை. சும்மா கையை நீட்டிகொண்டு விழுந்தேன். பந்து தானாகவே கையில் சிக்கிக் கொண்டு விட்டது" என்று கால்பந்து ஜாம்பவான் மரடோனா போல பதிலளித்தார் .

கடந்த 1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி, இங்கிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியின் போது கிராஸ் செய்யப்பட்ட பந்தை தலையால் முட்ட எத்தனித்தார் மரடோனா. ஆனால் மிஸ்ஸான பந்து, தலையில் படாமல் கையில் பட்டு கோலுக்குள் புகுந்து விட்டது. நடுவரும் கோல் என்று விசில் ஊதிவிட்டார்.

போட்டி முடிந்தவுடன் பேட்டியளித்த மரடோனா அது 'கடவுள் கை' என்று காமெடியாக குறிப்பிட்டார். அன்று முதல் 'ஹேன்ட் ஆப் காட்' என்ற வார்த்தை விளையாட்டு உலகில் பிரபலமாகி விட்டது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!