வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (27/03/2015)

கடைசி தொடர்பு:12:15 (27/03/2015)

கிவி வரட்டும் பார்த்துக்குறேன்...! கங்காரு உறுமல்!

லகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு நியூசிலாந்து அணி முதல் முறையாக தகுதி பெற்றாலும் உலக கிரிக்கெட் வரலாற்றில் இந்த இரு நாடுகளும் இந்தியா-பாகிஸ்தான் போல பரம விரோதிகள்தான்.

இந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இந்த இரு அணிகளும் இடம் பிடித்திருந்தன. ஆக்லாந்தில் நடந்த லீக் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோற்கடித்திருந்தது. அந்த தோல்விக்கு மெல்பர்ன் இறுதி ஆட்டத்தில் பதிலடி கிடைக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

அரையிறுதியில் இந்திய அணியை தோற்கடித்த பின், பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், 'நியூசிலாந்தில் உள்ளது போல் ஆஸ்திரேலிய மைதானங்களின் சூழல் இல்லை. போட்டி நடைபெறும் மெல்பர்ன் மைதானத்தில் நியூசிலாந்து அணி 4 முறைதான் எங்களை வீழ்த்தியுள்ளது. 15 முறை நாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். 29ஆம் தேதி நடைபெறும் போட்டி எல்லா ஆட்டங்களையும் விட வித்தியாசமானதாக இருக்கும்' என்றார்.

வரும் 29ஆம் தேதி இந்திய நேரப்படி 9 மணிக்கு ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்