வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (05/04/2015)

கடைசி தொடர்பு:10:25 (05/04/2015)

தோனி குழந்தையை பார்த்திருக்கீங்களா? புகைப்படம் வெளியீடு

ந்திய அணியின் கேப்டன் தோனியின் குழந்தையை படம் பிடித்து விட அகில உலக போட்டோகிராபர்கள் அனைவரும் திரண்டு போராடியும் தோனி டிமிக்கி கொடுத்து விட்டார்.எனினும் ஒரு போட்டோகிராபர் தோனி குழந்தையை படம் பிடித்து விட்டார்.

                              
இந்திய அணியின் கேப்டன் தோனி உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியாவில் இருந்த போது அவரது மனைவி சாக் ஷிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஜீபா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதுவரையில் தோனி குழந்தையின் புகைப்படம் வெளியிடப்படவில்லை. டெல்லியில் நேற்று தோனியின் நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவின் திருமணம் நடந்தது.

இந்த திருமண நிகழ்ச்சியில் தோனி மனைவி சாக் ஷி மற்றும் குழந்தையுடன் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. இதனால் எப்படியும் குழந்தையை படம் எடுத்துவிடலாம் என்று பத்திரிகை போட்டோகிராபர்கள் காத்திருந்தனர். ஆனால் சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தில் தோனி குடும்பத்துடன் பங்கேற்றாலும் குழந்தை ஜீபாவை போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. சுரேஷ் ரெய்னா ஜோடியுடன் தோனி மற்றும் அவரது மனைவி சாக் ஷி நிற்பது போன்ற புகைப்படங்களே வெளியிடப்பட்டன.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் திருமணம் முடிந்து தோனி சொந்த ஊரான ராஞ்சிக்கு நேற்று திரும்பினார். ராஞ்சி விமானநிலையத்தில் தோனியிடம் குழந்தை இருந்தது. அப்போது குழந்தை ஜீபாவை படம்பிடிக்க போட்டோகிராபர்கள் முயற்சித்தனர். போட்டோகிராபர்களின் முயற்சியை தோனி இன்முகத்துடன் ரசித்தாலும் குழந்தையின் முகத்தை அவர் கையால் மறைத்துக்கொண்டார். ஆனால் ஒரு போட்டோகிராபர் மட்டும் குழந்தையின் முகம் தெரியும் வகையில் படம் எடுத்துவிட்டார்.அந்த படம்தான் இது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்