இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் சேர்க்கப்பட்டால்கேப்டன் பதவி ராஜினாமா;அலெஸ்டர் குக் மிரட்டல் | kevin peterson should join england team

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (14/05/2015)

கடைசி தொடர்பு:16:50 (14/05/2015)

இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் சேர்க்கப்பட்டால்கேப்டன் பதவி ராஜினாமா;அலெஸ்டர் குக் மிரட்டல்

ங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மீண்டும் கெவின் பீட்டர்சன் சேர்க்கப்பட்டால், கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விட்டு இங்கிலாந்து அணிக்கு முழுக்கு போடப் போவதாக அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக விளங்கிய கெவின் பீட்டர்சன், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அணியில் இருந்து விலக்கப்பட்டார்.  அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றும் அந்த சமயத்தில் கேப்டனாக இருந்த ஸ்டிராஸ் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் தொடர்ந்து அணியில் ஓரங்கட்டப்பட்டார்.

இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம் பிடிக்க கெவின் பீட்டர்சன் பல முறை முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கவுண்டி போட்டியில் லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ரே அணிக்காக விளையாடிய  கெவின் பீட்டர்சன் முதல் இன்னிங்சில் 396 பந்துகளில் 36 பவுண்டரி, 15 சிக்சருடன் 355 ரன்கள் குவித்தார். கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு போட்டியில் கெவின் பீட்டர்சனால் எடுக்கப்பட்ட அதிக ரன் இதுதான்.

சிறப்பான இந்த இன்னிங்சுக்கு பின், இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்கும் முயற்சியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய இயக்குனர் ஸ்டிராஸ் (முன்னாள் கேப்டன்), தலைமை செயல் அதிகாரி டாம் ஹாரிஸ் ஆகியோரை கெவின் பீட்டர்சன் சந்தித்து பேசினார். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் கெவின் பீட்டர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் கெவின் பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டால், அ தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கே முழுக்குப் போடப் போவதாக இங்கிலாந்து அணியின் தற்போதைய டெஸ்ட் கேப்டன் அலெஸ்டர் குக் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக டெய்லி மிர்ரர் தெரிவித்துள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்