வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (25/05/2015)

கடைசி தொடர்பு:18:19 (25/05/2015)

'ஸ்லெட்ஜிங்' மைதானத்தில் ஒருநாள் கைகலப்பை உருவாக்கும்: மைக்கேல் ஹோல்டிங்

திரணி வீரர்களை வசை பாடும் ‘ஸ்லெட்ஜிங்’ போக்கினால், மைதானத்திலேயே கைகலப்பு நடக்க வாய்ப்பிருக்கிறது என்று மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் அச்சம் தெரிவித்துள்ளார்.

"நான் விளையாடும் காலக்கட்டங்களில் 'ஸ்லெட்ஜிங்' கிடையாது. நகைச்சுவையாக சில வார்த்தைகளை பேசுவது உண்டு. ஆனால் இப்போது ஒரு வீரர் அவுட் ஆனால் அவரை ஸ்லெட்ஜிங் செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர்.

நான் விளையாடிய காலத்தில் இது போன்று ஸ்லெட்ஜிங் இருந்திருந்தால், அது மைதானத்துடன் முடிந்து விடக்கூடிய ஒரு நிகழ்வாக மட்டும் இருந்திருக்காது. மைதானத்திற்குள் வசைபாடி விட்டு பிறகு வெளியே இனி நாம் நண்பர்கள் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இதே நிலை நீடித்தால் என்றாவது ஒருநாள் மைதானத்தில் நிச்சயம் வீரர்களுக்குள் அடிதடி சண்டை நடக்கும்.

வீரர்களின் தனிப்பட்ட உணர்ச்சிகள் மீது வசையை பிரயோகிப்பது நிற்க வேண்டும். இல்லையெனில் மைதானத்தில் ஏதோவொன்று நிகழும் அபாயம் உள்ளது. அப்போதுதான் நாம் எல்லையைக் கடந்து விட்டது குறித்து வருத்தப்படும் நிலைக்கு வருவோம்.

கடந்த 1995-ம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியின்போது ஸ்டீவ் வாஹ்,  மேற்க்கிந்திய பந்துவீச்சாளர் ஆம்புரோஸ் மீது தனிநபர் வசையைப் பிரயோகித்தார். பின்னர் இந்த சம்பவம்  குறித்து தனது சுயசரிதையில் எழுதிய அம்புரோஸ், அந்த சம்பவத்தால் தாம் மிகவும் கொதிப்படைந்ததாகவும்,  ஸ்டீவ் வாஹை அடித்து வீழ்த்த வேண்டும் என்று தனக்குள் எண்ணம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்