வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (31/05/2015)

கடைசி தொடர்பு:11:58 (31/05/2015)

அலெஸ்டர் குக்... குருவை மிஞ்சிய சிஷ்யன்!

ங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்து அலெஸ்டர் குக் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. நேற்றைய ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் அலெஸ்டர் குக், 75 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் குக், 32 ரன்களை எடுத்த போது இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கிரஹாம் கூச் 118 டெஸ்ட் போட்டிகளில் 8 ஆயிரத்து 900 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. சுமார் 22 ஆண்டுகலாமாக உடைக்கப்படாமல் இருந்த கிரஹாம் கூச்சின் இந்த சாதனையை நேற்று அலெஸ்டர் குக் முறியடித்தார். இங்கிலாந்து அணிக்காக அலெஸ்டர் குக் 114 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை ஏற்படுத்தினார்.

தற்போது 30 வயதான குக், பள்ளி பருவத்தில் கிரஹாம் கூச்சால் பயிற்சி அளிக்கப்பட்டவர். அந்த வகையில் குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆகி விட்டார்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்