10 நாட்களில் ஆஷிஷ் நெக்ரானா யாருனு கேட்பாங்க...ஒரு கிரிக்கெட் வீரரின் புலம்பல்!

ந்தியத் தேர்வுக்குழுவினர் தனது திறமையைக் கண்டு கொள்ளாதது குறித்து ஆஷிஷ் நெக்ரா வருத்தம் தெரிவித்துள்ளார்.இந்திய அணி தேர்வுக்குழுவினர் தொடர்ந்து தன்னை ஓரம் கட்டி வருவதாக ஆஷிஷ் நெக்ரா ஆங்கில விளையாட்டு இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், '' சேலஞ்சர் தொடராக இருந்தாலும் தியோதர் டிராபியாக இருந்தாலும் தற்போது சிறந்து விளங்கும் பந்துவீச்சாளர்களுக்கு நிகராகவே பந்து வீசுகிறேன், சமயத்தில் அவர்களை விடவும் சிறப்பாகவே வீசுகிறேன். இந்திய கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் சில அற்புதமான ஓவர்களை வீசியுள்ளேன்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று பலர் எனக்கு நம்பிக்கை அளித்தனர். ஆனால் 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் கூட எனக்கு இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்த பிறகும் கூட 10 நாட்களில் தேர்வுக்குழுவும் ரசிகர்களும் என்னை மறந்து விடுகின்றனர். ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும் போது இந்திய அணியில் இடம் கிடைக்காதது என்பதே எனக்குள் மிகப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. 

டெஸ்ட் கிரிக்கெட்டையும் இழந்து விட்டேன். நான் இன்னும் நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். என்னை போன்ற ஒரு பவுலருக்கு 25 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட் முடிவுக்கு வந்திருக்க கூடாது.

இந்திய அணிக்கு விளையாடும் அளவுக்கு நான் நல்ல முறையில் செயல்படுவதாகவே கருதுகிறேன். இப்போதும் நல்ல முறையிலேயே பந்துவீசுகிறேன். ஹர்பஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்பதற்காக நானும் தேர்வு செய்யப்படவேண்டும் என்று நான் கருதவில்லை. திறமைக்கு வயது ஒரு காரணமாக அமைய முடியாது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!