94 நாட்களில் சச்சின் சாதனையை முறியடித்த அலெஸ்டர் குக்

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் 9ஆயிரம் ரன்களை எடுத்ததற்கான சச்சின் டெண்டுல்கர் சாதனையை அலெஸ்டர் குக் முறியடித்தார்.

ஹெடிங்லீயில் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 30 வயது 159 நாட்களில், அலெஸ்டர் குக் 9 ஆயிரம் ரன்களை கடந்தார். சச்சின் இந்த சாதனையை 30 வயது 253 நாட்களில் படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை குக் 94 நாட்களுக்கு முன்னதாகவே முறியடித்துள்ளார். 31 வயதுக்கு முன்பாகவே டெஸ்டில் 9,000 ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் குக் ஆகியோர்தான் உள்ளனர்.

மேலும் 204 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்களை எடுத்ததன் மூலம் குறைந்த இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர்கள் பட்டியலில் குக் 10- வது இடத்தில் உள்ளார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் 9 ஆயிரம் ரன்களை எட்ட 179 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!