வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (12/06/2015)

கடைசி தொடர்பு:15:43 (12/06/2015)

கோல் அடிப்பதில் மரடோனா தாத்தாவை மிஞ்சிய பேரன் (வீடியோ)

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு 2 மகள்கள் உண்டு. தற்போது 55 வயதாகும் மரடோனாவின் இளைய மகள் ஜெனைனாவுக்கும், பிரபல அர்ஜென்டினா கால்பந்து வீரர் செர்ஜியோ அகுராவுக்கும் பிறந்த பெஞ்சமின் என்ற பேரன் மீது, மரடோனாவுக்கு அலாதி பிரியம். ஏனென்றால் பெஞ்சமினும் கால்பந்தை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டார். மாலை வேளைகளில் தாத்தாவும் பேரனும் கால்பந்து விளையாடுவது வழக்கம்.

              

அப்படி விளையாடும் போது மரடோனாவை சாமர்த்தியமாக தாண்டி சென்று பேரன் கோல் அடிக்கும் காட்சிதான் இது. இந்த வீடியோவை மரடோனாவே வெளியிட்டுள்ளார். பெஞ்சமினின் தந்தை செர்ஜியோ அகுரா கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிக்கான அர்ஜென்டினா அணியிலும் இடம் பெற்றுள்ளார். மான்செஸ்டர் அணியின் முன்னணி நட்சத்திர வீரரும் கூட.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்