வங்கதேசத்தில் இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும் மூங்கில் கட்டை விளம்பரம்...!

டந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, வெளியிடப்பட்ட மோகா மோகா விளம்பரம் போல, தற்போது வங்கதேச - இந்திய தொடரின் போது இந்திய ரசிகர்களை வங்கதேசத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனம் இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும்விதத்தில்  விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

              

வங்க தேசத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரத்தில் ஒரு இந்தியரும் பாகிஸ்தானியரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தியர் எதிரே இருப்பவரை பார்த்து நீங்கள் பாகிஸ்தானியரா? என்று கேட்கிறார். இப்படி தொடங்கும் பேச்சால், ஒரு கட்டத்தில் கோபமடைந்த பாகிஸ்தானியர் கீழே கிடந்த மூங்கில் கட்டையை எடுத்து இந்தியருக்கு காட்டுகிறார். தொடர்ந்து பல தரப்பினரும் மூங்கில் கட்டையை காட்டுவது போல் அந்த விளம்பரம் முடிகிறது.  இந்தியர்களுக்கு வெற்றி கிடைக்காது மூங்கில் கட்டைதான் கிடைக்கும் என்று அந்த விளம்பரம் முடிகிறது.

இந்தியா அணி தற்போது வங்கதேச சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது இந்த விளம்பரம் அங்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்துக்கு இணையத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.உலகக் கோப்பை போட்டியில் காலிறுதியில் இந்திய அணியிடம் வங்கதேசம் தோல்வி கண்டது. அப்போது விளைந்த வெறுப்பை பணமாக்கும்விதத்தில் சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனம் இது போன்ற விளம்பரத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!