பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 'பிங்க்' வர்ண பந்து! | Pink cricket balls for day-night Test

வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (17/06/2015)

கடைசி தொடர்பு:17:30 (17/06/2015)

பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 'பிங்க்' வர்ண பந்து!

ந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவும், ரசிகர்களை மைதானத்திற்கு இழுக்கவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி. நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது.

வரும் செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளன. இந்த போட்டியில் முதன் முதலாக ரோஜா நிறத்திலான  கிரிக்கெட் பந்து பயன்படுத்தப்படவுள்ளது.

விளக்குகளின் வெளிச்சத்தில் 'பிங்க்' வர்ணத்திலான பந்து தெள்ளத் தெளிவாக தெரியும் என்பதால், பகலிரவு டெஸ்ட் போட்டிளில் இந்த ரக பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன. அதுபோல் மங்கலான வெளிச்சத்திலும் இந்த ரக பந்துகளை எளிதாக காண முடியும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான' கோகாபுரா ஸ்போர்ட்'  பிங்க் வர்ணத்திலான பந்துகளை தயாரித்துள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்போது இந்த பந்துகளை டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்ததலாம் என்று அது தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் 'பிங்க்' வர்ணத்திலான பந்து சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்