வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (16/07/2015)

கடைசி தொடர்பு:17:15 (16/07/2015)

இங்கிலாந்து வீரர்களுடன் பயிற்சியில் அசத்தும் சச்சின் மகன்!

லண்டன்: இந்திய  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், லண்டனில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
 

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
 

முன்னதாக, இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் (வயது 14), கிரிக்கெட் தொடர்பான பயிற்சிகளை பயிற்சி மேற்கொண்டார். கிரிக்கெட்டில் உள்ள முக்கியமான பவுலிங்கை முதலில் அவர் கற்றுக் கொண்டார்.

மேலும், கிரிக்கெட் போட்டியில் உள்ள தந்திரங்களை கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் அர்ஜுன் கற்று வருகிறார். அர்ஜுன் டெண்டுல்கருக்கு கிப்சன் பயிற்சி அளித்து வருகிறார்.
 

மகன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருவதை தந்தை சச்சின் டெண்டுல்கர் கண்காணித்து வருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்