வெளியிடப்பட்ட நேரம்: 09:52 (20/07/2015)

கடைசி தொடர்பு:15:21 (20/07/2015)

வாசிம் அக்ரமை நினைவுபடுத்தும் அர்ஜுன் தெண்டுல்கரின் பந்துவீச்சு (வீடியோ)

ந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இப்போது குடும்பத்துடன் லண்டனில் உள்ளார். அவரது மகன் அர்ஜுன் தெண்டுல்கர் அங்கு தீவிர கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார். அர்ஜுன் தெண்டுல்கரை மிகச் சிறந்த பந்துவீச்சாளராக்க சச்சின் முடிவு செய்துள்ளார். இதற்காக பல்வேறு உக்திகளை சச்சின் கையாண்டு வருகிறார்.
                  அர்ஜுனுக்கு பல பந்துவீச்சு ஜாம்பவான்கள் டிப்ஸ் அளித்து வருகின்றனர். தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடருக்காக பயிற்சி எடுத்து வரும் இங்கிலாந்து வீரர்களுக்கு பந்து வீசி அர்ஜுன் தெண்டுல்கர் பயிற்சி எடுத்து வருகிறார். அர்ஜுனின் இடது கைபந்து வீச்சு பாகிஸ்தான் முன்னாள் சூப்பர்ஸ்டார் வாசிம் அக்ரமை நினைவுபடுத்தும் வகையில் இருக்கிறது .அந்த வீடியோதான் இது...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்