நீக்கப்படும் பயிற்சியாளர்கள்: தேசிய விளையாட்டின் நிலைமை என்னவாகும்? | Indian hockey team coach sacked

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (20/07/2015)

கடைசி தொடர்பு:09:27 (21/07/2015)

நீக்கப்படும் பயிற்சியாளர்கள்: தேசிய விளையாட்டின் நிலைமை என்னவாகும்?

ந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால் வான் ஏஸ் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்தை சேர்ந்த  இவர் 5 மாதங்கள் மட்டுமே பணியில் இருந்தார்.

அண்மையில் பெல்ஜியத்தின் ஆண்ட்வெப் நகரில் உலக ஹாக்கி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து அறிக்கை அளிக்கத் தவறியதால், இந்திய ஹாக்கி சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
 

ஆனால் நீக்கத்துக்கான உண்மைகாரணம் இதுவல்ல என்று சொல்லப்படுகிறது. உலக ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதியில் மலேசியாவுடன் இந்தியா மோதியது. இந்த போட்டி முடிந்தவுடன் இந்திய ஹாக்கி சம்மேளனத் தலைவர் நரீந்தர பத்ரா, இந்திய வீரர்களிடம் ஏதோ கோபமாக பேசியுள்ளார்.

இதனை பார்த்த பயிற்சியாளர் பால வான் ஏஸ், "இவ்வாறு வீரர்களை திட்டாதீர்கள்... களத்தை விட்டு வெளியேறுங்கள்" என்று சொன்னாராம். அப்போதே நரீந்தர பத்ராவுக்கு பயிற்சியாளர் மீது கோபம் ஏற்பட்டதாம். இதனைத் தொடர்ந்துதான் பால் வான் ஏஸ் நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹிமாச்சலபிரதேசத்தில் 'சாய் ' சார்பில் இந்திய ஹாக்கி வீரர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. விடுப்பு முடிந்து பால் வான் ஏஸ், இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் பயிற்சி முகாமுக்கு வரவில்லை. இந்த விவகாரத்தாலும் வால் வான், பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

                        

இங்கிலாந்தை சேர்ந்த டெர்ரி வால்ஷ்  ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக்கேல் நாப்ஸ் ஆகியோரைத்
தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்தான்,பால் வான் ஏஸ்  இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவரது பயிற்சியின் கீழ், உலக ஹாக்கி தொடரில் 4வது இடத்தையும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அஸ்லான்ஷா போட்டியில் 3வது இடத்தையும் பிடித்தது.

ஆனால் பயிற்சியாளர் நீக்கத்துக்கு எந்த காரணத்தையும் இந்திய ஹாக்கி சம்மேளனம் கூறவில்லை. வரும் 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வேண்டிய நேரத்தில், இப்படி அடிக்கடி பயிற்சியாளரை மாற்றுவது தவறு என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பால் வான் ஏசை பதவி நீக்கம் செய்யவில்லையென்று ஹாக்கி இந்தியா அமைப்பு விளக்கமளித்துள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்