ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்க கூடாது- வான்கடே பாதுகாவலர் கருத்து | Mumbai Cricket Association upsets Wankhede Stadium security guard by lifting SRK ban

வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (04/08/2015)

கடைசி தொடர்பு:12:42 (04/08/2015)

ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்க கூடாது- வான்கடே பாதுகாவலர் கருத்து

மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய நடிகர் ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியிருக்க கூடாது என்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வான்கடே மைதான பாதுகாவலர் விகாஷ் டால்வி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடந்தபோது, மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கானுக்கும், வான்கடே மைதான பாதுகாவலர் விகாஷ் டால்விக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விகாஷ் டால்வியை நடிகர் ஷாருக்கான் தகாத வார்த்தைகளால் திட்டியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய நடிகர் ஷாருக்கானுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், நடிகர் ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க முடிவெடுக்கப்பட்டது. ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டுகள் தடை 3 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. தடையை நீக்கியதற்காக நடிகர் ஷாருக்கான் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அதேவேளையில் நடிகர் ஷாருக்கான் சண்டையிட்ட பாதுகாவலர் விகாஷ் டால்வி, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், '' இந்த விஷயத்தில் நான் என்ன செய்ய முடியும்? மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் இந்த விஷயத்தில் என்னிடம் ஆலோசித்து முடிவெடுத்திருக்க வேண்டும். அந்த சம்பவம் நடந்த போது நீண்ட கால விடுப்பில் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஒரு அரசியல் கட்சி என்னிடம் ஷாருக்கான் நடந்து கொண்ட விதத்திற்காக அவருக்கு பாராட்டு விழா நடத்தியது. நாங்கள் சாதாரண பாதுகாவலர்கள். எங்களை பற்றி யார் யோசிப்பார்கள்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்