கால்பந்து ஜாம்பவான் மரடோனா மீண்டும் திருமணம்!

ர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான  மரடோனா, தற்போதையை காதலி ரோசியா ஒலிவாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

துபாயில் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். துபாய் விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மரடோனாவின் காதலி ரோசியா ஓலிவா, இந்த ஆண்டு இறுதிவாக்கில் தானும் மரடோனாவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

மரடோனா, முதல் மனைவி கிளாடியா ஃபில்பானாவை கடந்த 2003ஆம் ஆண்டு விவாகரத்து
செய்தார். இவர் மூலம் மரடோனாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமண பந்தத்தில், இருவரும் வங்கியில் கூட்டு கணக்கு வைத்திருந்த போது,  மரடோனாவின் பணத்தை கிளாடியா மோசடி செய்ததாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு மரடோனா , ரோசியா ஒலிவாவை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற டிசம்பர் 13ஆம் தேதி போப் ஆண்டவர் முன்னிலையில் 54 வயது மரடோனா25 வயது ரோசியா ஒலிவாவை  திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்தி பரவி வருகின்றன.

முதல் மனைவி தவிர மரடோனாவுக்கு மேலும் 3 பெண்களுடன் தொடர்பு இருந்தது. அந்த வழியில் மரடோனாவுக்கு ஒரு மகனும் உள்ளார்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!