வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (14/09/2015)

கடைசி தொடர்பு:08:54 (14/09/2015)

யு.எஸ். ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்றுள்ளார் ஜோகோவிச்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும், சுவிச்சர்லாந்து வீரர் ஃபெடரரும் மோதினர். இந்த ஆட்டத்தில், ஜோகோவிச்சிடம் 4-6, 7-5, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார் சுவிச்சர்லாந்து வீரர் ஃபெடரர்.இதன் மூலம் ஜோகோவிச் யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றி உள்ளார். மேலும் செர்பிய வீரர் ஜோகோவிச், 10வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்