இந்தியா வரும் கால்பந்து ஜாம்பவான் பீலேவை சந்திக்கிறார் ஏ.ஆர் ரஹ்மான்! | AR Rahman to join Pele in Kolkata

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (08/10/2015)

கடைசி தொடர்பு:16:18 (08/10/2015)

இந்தியா வரும் கால்பந்து ஜாம்பவான் பீலேவை சந்திக்கிறார் ஏ.ஆர் ரஹ்மான்!

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே வரும் அக்டோபர் 11 ஆம் தேதி இந்தியா வருகிறார். கொல்கத்தாவில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.அக்டோபர்  13ஆம் தேதி சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும் அத்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கிடையேயான ஐ.எஸ். எல் போட்டியை நேரில் கண்டுகளிக்கிறார். 

முன்னதாக 12ஆம் தேதி நேதாஜி உள்ளரங்கு மைதானத்தில் 'லெஜன்ட் இன் இந்தியா' என்ற நிகழ்ச்சியில் பீலே பங்கேற்கிறார். அவருடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இந்த தகவலை 'லெஜன்ட் இன் இந்தியா ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள மல்டிகான் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி சாதரா தத்தா உறுதி செய்துள்ளார்.
 

பிரேசியில் அணியுடன் 3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள பீலேவின் வாழ்க்கை வரலாறு படமான ''பர்த் ஆப் லெஜன்ட்' என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான்தான் இசையமைக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது  அந்த படத்திற்காக தான் அமைக்கவுள்ள இசை குறித்து பீலேவிடம் ஏ.ஆர். ரஹ்மான் விளக்குவார் எனத் தெரிகிறது.

இதற்கு முன் கடந்த 1977 ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு கால்பந்து வீரராக பீலே வருகை தந்துள்ளார். அப்போது நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பீலே விளையாடி வந்தார். கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மோகன் பகான்-  நியூயார்க் காஸ்மோஸ் அணிகள் மோதிய ஆட்டத்தை காண ஒரு லட்சம் ரசிகர்கள் திரண்டனர். தற்போது 38 ஆண்டுகளுக்கு பிறகு பீலே மீண்டும் இந்தியா வருகிறார்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close