பீலேவை தொடர்ந்து ரொனால்டோ இந்தியா வருகை!

லகக் கோப்பை கால்பந்து தொடரில் 15 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ள பிரேசில் வீரர் ரொனால்டோ இந்தியா வருகிறார். ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள டெல்லி - மும்பை அணிகளுக்கிடையேயான ஆட்டத்தை அவர் நேரில் ரசிக்கிறார்.

ஆனால் ரொனால்டோ டெல்லியில் ஒரே ஒருநாள் மட்டும்தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. அப்போது பிரேசில் மற்றும் ரியல்மாட்ரிட் அணிகளின் முன்னாள் விங்கரும், தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளருமான ராபர்ட்டோ கார்லசை ரொனால்டோ சந்திக்கிறார்.

பிரேசில் அணிக்காக 1998, 2002, 2006-ம் ஆண்டு என 3 உலகக் கோப்பை போட்டிகளில் ரொனால்டோ விளையாடியுள்ளார். 1998 உலகக் கோப்பை போட்டியில்அதிக கோல் அடித்த வீரருக்கான தங்க பந்து விருதை ரொனால்டோ பெற்றார்.  98 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, 68 கோல்களை பிரேசில் அணிக்காக அடித்துள்ளார். பார்சிலோனா,இன்டர் மிலன், ரியல்மாட்ரிட் போன்ற புகழ்பெற்ற கால்பந்து அணிகளுக்காகவும் விளையாடியவர் இவர் .

மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 15 கோல்கள் அடித்த இவரது சாதனையை, கடந்த உலகக் கோப்பை போட்டியின் போது ஜெர்மனி வீரர் மிராஸ்லாவ் குளோஸ் முறியடித்தார். மிராஸ்லாவ் குளோஸ், உலகக் கோப்பையில் 16 கோல்கள் அடித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!