வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (03/11/2015)

கடைசி தொடர்பு:17:09 (03/11/2015)

டாடா மோட்டார்ஸ்க்கு லயனல் மெஸ்சி விளம்பர தூதர்!

ந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ்க்கு பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி  விளம்பர தூதராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகிலேயே கால்பந்து மூலம் அதிக வருவாய் ஈட்டும் வீரர்களில் 2வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா கேப்டனும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்சி, இந்திய நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறை.  இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கானது.

இது குறித்து லயனல் மெஸ்சி கூறுகையில், '' இந்தியா குறித்து பல்வேறு வியக்கத்தகு விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். பெருமை வாய்ந்த அந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருப்பது கவுரவமிக்கது''  என்று குறிப்பிட்டுள்ளார்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்