கட்சியை கைப்பற்றும் நோக்கில் இம்ரான்கானுக்கு விஷம் கொடுத்தாரா மனைவி? | Did ex-wife Reham try to poison Imran Khan?

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (05/11/2015)

கடைசி தொடர்பு:17:08 (05/11/2015)

கட்சியை கைப்பற்றும் நோக்கில் இம்ரான்கானுக்கு விஷம் கொடுத்தாரா மனைவி?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கானின் இரண்டாவது மனைவி ரேகம்.  கடந்த 30-ம் தேதி இம்ரான்கானும் ரேகமும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர்.

இம்ரான்கானின் மனைவியும் செய்தியாளருமான ரேகத்திற்கு அரசியலில் குதிக்கும் ஆசை இருந்தாகவும் அதனை இம்ரான்கான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதுதான் பத்தே மாதத்தில் மணமுறிவுக்கு காரணமாக முதலில் அறியப்பட்டது.

தற்போது இம்ரான்கான், விவகாரத்து தொடர்பாக மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இம்ரான்கான் நடத்தி வரும் தெக்ரிக் இ இன்ஷாப் கட்சியின் தலைமை பதவியை பிடிக்கும் ஆசையில் ரேகம், இம்ரான்கானுக்குஸ்லோ பாய்சன் விஷத்தை உணவில் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இம்ரானும் ரேகமும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்கள் இருவரும் மனமொத்து வாழவில்லையாம். இருவருக்குமிடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில், " நீங்கள் எப்படி கட்சியை நடத்துகிறீர்கள் ?' என்று  பார்த்து விடுகிறேன் என்று ரேகம் நேரடியாகவே இம்ரானிடம் சவால் விட்டாராம்.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பு ஒன்று, நெருங்கிய நண்பர்கள் வழியாக இம்ரான்கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக  எச்சரித்துள்ளது. இம்ரான்கானின் தெக்ரிக் இ இன்ஷாப் கட்சியின் தலைமையை கைப்பற்றும் நோக்கில் ரேகம் இருப்பதாகவும், அதனால் இம்ரான்கான் எச்சரிக்கையாக இருக்கும்படியும்  நண்பர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒரு முறை லட்டு சாப்பிட்டு இம்ரான்கான் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இம்ரான்கானின் உடலில் விஷம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக  அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஷாகீத் மசூதுத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்துதான்,  லண்டனில் நடைபெற்ற   ஒரு மாநாட்டுக்கு சென்றிருந்த ரேகமுக்கு இம்ரான்கான் இமெயில் வழியாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்தே இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்