வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (18/11/2015)

கடைசி தொடர்பு:18:17 (18/11/2015)

மிட்சல் ஜான்சனை நாம் ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா?

ருதினப் போட்டி என்றால் மிட்சல் ஜான்சனின் 10 ஓவர் எப்போது முடியும் என்பதுதான் எதிரணியின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுவே, டெஸ்ட் போட்டி என்றால் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறார், இவரது பவுன்சரில் யார் யார் நிலைகுலையப் போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். கிட்டத்தட்ட 10 வருட காலம் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய மிட்சல் ஜான்சன், நவம்பர் 17-ம் தேதியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொன்னார். 

ஆஸ்திரேலிய அணியில் பிரட்லீ, மெக்ராத், ஃப்ளெம்மிங் போன்றவர்கள் கலக்கிய காலத்திற்கு பின்பு, ஆஸி அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் முக்கிய இடம்பிடித்தவர்களில் முதன்மையானவர் மிட்சல் ஜான்சன். ஓடிவரும் ஸ்டைல் துவங்கி, பந்தை ஆடுகளங்களில் அடித்து தலைக்கு மேலே பவுன்ஸர்களாக மாற்றுவது வரை பேட்ஸ்மேனை ஒரு நிமிடம் நிலைகுலைய வைப்பவர். உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்களான சச்சின், தோனி, காலிஸ் போன்றவர்களை கலங்கடித்தவர் ஜான்சன்.

கிரிக்கெட் உலகம்  இந்த 5 காரணங்களுக்காக கட்டாயம் மிட்சல் ஜான்சனை மிஸ் செய்வார்கள்.

ஸ்லெட்ஜிங்:

ஆஸ்திரேலிய அணியின் ஆஸ்தான ஆயுதமான ஸ்லெட்ஜிங்கை சிறப்பாக செய்தவர் ஜான்சன். சைமண்ட்ஸ், பிரெட்லீக்கு இணையாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டவர் ஜான்சன்தான். 2013-14 ஆஷஸ் தொடரின்போது ஜோ ரூட்டை வம்பிழுத்ததுதான் இவரது ஸ்லெட்ஜிங்கின் உச்சக்கட்டம். ஜான்சனின் அனல் பறக்கும் பந்துவீச்சு, சரியான நேரத்தில் கைகொடுக்கும் பேட்டிங் இதனையெல்லாம் தாண்டி இவரது ஸ்லெட்ஜிங்கிற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.


 


அக்ரஸிவ் ஆட்டம்:

களத்தில் எப்போதும் அக்ரஸிவாக இருந்தால்தான் ஒரு வேகப்பந்து வீச்சாளரால் வேகமாக பந்துகளை வீச முடியும் என்பது அக்தர் காலத்து ஃபார்முலா. அதனை இன்னும் ஒருபடி சிறப்பாக செய்தவர் ஜான்சன். கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி. அதற்கு முன்புதான் பிலிப் ஹூயூக்ஸ், பவுன்ஸர் தாக்கி உயிரிழந்தார். அதனால் மொத்த ஆஸி அணியும் மனமுடைந்து இருந்தது. ஆனால் முதல் டெஸ்டில் ஜான்சன் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வீசிய பந்து ஹெல்மெட்டை தாக்கி சற்று நேரம் நிலைகுலைந்தார் கோலி. அந்த பவுன்ஸர் தான் ஆஸ்திரேலியா தொடரை வெல்ல ஆஸி வீரர்களை மனதளவில் தயார்படுத்தியது என்றே சொல்லலாம்.


 

மேட்ச் வின்னர்:

அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அனைவரையும் மேட்ச் வின்னர் என்பார்கள். ஜான்சன் இதில் சற்று வித்தியாசப்படுபவர். ஆஸ்திரேலிய அணியின் அனைத்து போட்டிகளிலும் ஜான்சனின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், அதே போல் அவரது ஆட்டமும் இருக்கும். ஒற்றை ஆளாக அணியை வெற்றிப்பாதைக்கு பேட்ஸ்மேன்கள் தான் அழைத்து செல்வார்கள். ஆனால் ஒரு பந்துவீச்சாளராக அதனைச் செய்து காட்டியவர் ஜான்சன். இதற்கு உதாரணம் 2013-14 ஆஷஸ் தொடரில் அவர் வீழ்த்திய 37 விக்கெட்டுகள்.


பயமுறுத்தும் பவுன்ஸர்:

ஜான்சனின் ப்ளஸ் பவுன்சர் தான். டெஸ்ட் போட்டிகளில் புதிதாக களமிறங்கும் வீரர் ஜான்சன் பந்துவீசும் போது இறங்க பயப்படுவார்கள் காரணம் அவர்கள் சந்திக்கும் முதல் பந்தை கணிக்க முடியாத பவுன்ஸராக்கி ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் எளிதில் திருப்பும் திறன் கொண்டவர் ஜான்சன். டென்னிஸ் லில்லி புகழ்ந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஜான்சனும் ஒருவர். ஓய்வை அறிவித்த பின்பு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் 'இங்கிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியடைவார்கள் காரணம் இனி அவர்கள் ஜான்சனை எதிர்கொள்ளமாட்டார்கள்' என புகழ்ந்துள்ளார். 

விக்கெட் மெஷின்:

ஆஸ்திரேலியாவின் விக்கெட் மெஷின் ஜான்சன். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் 4வது இடத்திலும், வேகப்பந்துவீச்சாளர்களில் 3வது இடத்திலும் உள்ளார். கடைசி போட்டியில் அவர் எடுத்த விக்கெட் ஆஸி ஜாம்பவான் பிரெட்லீயின் சாதனையை முறியடித்தது. கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிநாளில் கூட சாதனை படைத்தார் ஜான்சன். மூன்று வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து ஜான்சன் 590 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2008ம் ஆண்டு தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான போட்டியில் 8 வீரர்களை ஒரே இன்னிங்ஸில் வீழ்த்தியதே அவரது சிறப்பான பந்துவீச்சு.

மிட்சல் ஜான்சனின் மிரட்டல் பந்துவீச்சு:

 

 
Mitch Johnson’s thunderbolts

This is one of our most-watched videos EVER! Meanwhile, see what the Barmy Army had to say about the news HERE: http://cricketa.us/1N8cvox

Posted by cricket.com.au on 16 November 2015

 

ஜான்சனுக்கு பிரபலங்களின் பாராட்டு:

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்