சிக்சர் மன்னன் சுரேஷ் ரெய்னா பற்றி 12 ஹிட்ஸ்!

ந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன், ஃபீல்டிங் கில்லி, ஐ.பி.எல் சூரன் ரெய்னாவுக்கு இன்று (27-ம் தேதி) பிறந்த நாள். அவர் பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய (?) விஷயங்கள்.

1) சுரேஷ் ரெய்னாவுக்கு தினேஷ், நரேஷ், முகேஷ் என மூன்று சகோதரர்களும் ரேணு என ஒரு சகோதரியும் உள்ளனர்.

2) வீட்டில் ரெய்னாவின் செல்லப் பெயர் 'சோனு'!

3) 'ரெய்னா உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் மிக முக்கியமானவர்!’ எனப் பாராட்டியிருப்பவர் யார் தெரியுமா... ஜான்டி ரோட்ஸ்!

4) 2010-ல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட்டில் முதன்முதலாக களமிறங்கி, அறிமுகமான போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.

5) 2011-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 29 பந்துகளை எதிர்கொண்டு ரெய்னா டக்-அவுட் ஆனார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இத்தனை பந்துகளை சந்தித்து டக்-அவுட் ஆன வீரர் ரெய்னா தான்.

6) இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற இரண்டாவது இளம் வயது வீரர் ரெய்னா. அப்போது அவருக்கு வயது 23.

8) 2014 வங்கதே சுற்றுப்பயணத்துக்கு ரெய்னா இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அத்தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 104 ரன்களுக்கே ஆல்-அவுட். ஆனால், சளைக்காத ரெய்னா களத்தில் ஒவ்வொரு பந்துக்கும் வியூகம் வகுத்து, ஒவ்வொரு பவுலரிடமிருந்தும் ‘பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்’ கொண்டு வந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைக் கொய்தார்.

9) 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, ஐ.பி.எல், சாம்பியன் லீக் என இந்தப் போட்டித் தொடர்கள் அனைத்திலும் சதமடித்த ஒரே இந்திய வீரர் ரெய்னாதான். சர்வதேச டி20 அரங்கில் சதமடித்த முதல் இந்திய வீரரும் கூட!

10) ரெய்னா அவ்வளவு ஃப்ரெண்ட்லி. களத்தில் அரைசதம் அடிக்கும் வீரருக்கு முதல் க்ளாப்ஸ், விசில் கிளம்புவது ரெய்னாவிடமிருந்துதான்.

11)  ஒரு முறை பாகிஸ்தான் அணியை விமர்சித்து ட்வீட்டி சர்ச்சையில் சிக்கினார் ரெய்னா. பின்னர், "இந்த போஸ்டை என் உறவினர் எனக்கு தெரியாமல் போட்டு விட்டார். நான் ஒரு விளையாட்டு வீரன், யாரையும் மரியாதை குறைவாக நினைக்கமாட்டேன்" என வருந்தி மீண்டும் ட்வீட் செய்தார். இதை நெட்டிசன்கள் #Rainanephew #replacemovietitilewithnephew என கலாய்த்து டிரெண்டாக்கினர்.12) மீருதியா கேங்க்ஸ்டர்ஸ் என்ற பாலிவுட் படத்தில் 'து மிலி சப் மிலா' என்ற பாடல் பாடியிருக்கிறார் ரெய்னா.

களத்தில் மட்டுமல்ல, டிரெஸ்ஸிங் ரூமிலும் 'டீம் ஸ்பிரிட்’ தக்க வைப்பதுதான் ரெய்னாவின் மேஜிக்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!