சென்னை எப்படி இருக்குது?... இந்தியா வந்த ரஃபேல் நடால் கேட்ட முதல் கேள்வி இது

ர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு ஒருநாள் கவுரவ விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்தார்.

அதற்காக  டெல்லியில் உள்ள அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்ற ரஃபேல் நடால், முதலில் எழுப்பிய கேள்வி ''சென்னையில் இப்போது நிலைமை எப்படியிருக்கிறது என்பதுதான்? '' என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது.

இது குறித்து அந்த பத்திரிகை நடால் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில்,'' சென்னை வெள்ளம் குறித்தும் மக்கள் அடைந்த துயரம் குறித்தும் கேள்விபட்டேன். எனக்கு இது மிகவும் வருத்தத்தை அளித்தது. நாம் விளையாடிய, பழகிய மண்ணில் இது போன்ற துயரங்கள் நடக்கும் போது நம்மையும் நிச்சயம் அது பாதிக்கும்.

சென்னை ஓபன் போட்டியில் விளையாடுவதற்காக இரு முறை சென்னை வந்துள்ளேன். அற்புதமான ரசிகர்கள் நிறைந்த மண் அது. ஏராளமான மக்கள் உயிரிழந்ததும்  சொத்துக்களை இழந்ததும் எனக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சென்னை இத்தகைய இக்கட்டான நிலையில் இருந்து விரைவில் மீண்டுவிடும் என்று நம்புகிறேன்'' என கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!